பக்கம்:பூ மணம்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 : 1 வெயிலில் வாடி வதங்கிய வண்ணமலர்போன்று பூமா சோபை குறைந்து காணப்பட்டாள். அவள் நேத்திரங்கள் நீர் கூட்டின. ஏந்தி நின்ற காபியை லடிக் கென்று பிடுங்கி வாயில் ஒரு மடக்கு ஊற்றினன் அவன். அவ்வளவுதான்! சீ, மூதேவி, காபியில் ஜீனி போடக்கூடத் துப்பில்லாமல் அப்படி உன் நினைவு எங்கு சுற்றி அலேகிறது ? ...சனியன்! உன் கண்ணில் விழித்தால்கூடச் சோறு கிடைக்காது...' என்று அலறிஞன், ராஜேந்திரன். ராஜேந்திரன்தான இவன்...? பூமாவின் கணவன்தா.ை..? சித்தப்பிரமை கொண்டவனைப்போல அவன் சிரித் தான். காபி தம்ளரை ஓங்கிப் பூமாமீது வீசினன். நல்ல வேளேயாக அவள் மயிரிழை நகர்ந்து கொண்டாள். தம்ளர் தரையில் மோதிக் கிடந்தது. என்றுமில்லாமல் இப்படித் தன் புருஷன் நடப்பது கண்டு பூமா தீயில் மெழுகென உருகிளுள் ; கண்ணிர் உகுத்தாள். ஞாபகமில்லே இன்று மட்டும்தான் இப்படி நேர்ந் திருக்கிறது. இதற்கு இப்படி ஏன் தாறுமாருக வார்த்தை களைக் கொட்டுகிறீர்கள் ? உங்களுக்கு மன சரியில்லே, போலிருக்கிறது...?? - 'நாயே, எதிர்வார்த்தையாட வேறே உனக்குத் துணிச்சல் வந்துவிட்டதா? அன்றைக்கே கண்டவனுடன் சினிமாவுக்குப் போய் வந்ததற்கு உன்னை மண்டையில் அடித்துத் துரத்தி யிருக்கவேணும். சனியனே, தொலேந்து மோ...?? என்று ஆத்திரத்துடன் கூறி, அவன் பூமாவை எட்டி உதைத்தான். 'ஐயோ’’ என்று அலறியவண்ணம் மூர்ச்சித்து விழுந்: தாள் பூமா. பாவம், வேளே தப்பிய நேரமாயிற்றே...! மழை இன்னும் சரியாக நின்றபாடில்லை. சொட்டுச் சொட்டாகத் தூறிக்கொண்டிருந்தது. என்ன நினைத்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மணம்.pdf/117&oldid=835343" இலிருந்து மீள்விக்கப்பட்டது