பக்கம்:பூ மணம்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதினைந்து : இதய முள் தன் நினைவு வந்து கண் விழித்துப் பார்த்த பூமா, சுவர்க் கடிகாரம் இரவில் மணி பத்து அடிப்பதை உணர்ந் தாள். . 'ரொம்ப நாழி ஆகிவிட்டதே' என்று வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்திருக்க முயன்ற அவள், தன் உடல் வேதனையை அறியவே, சற்று முன் நடந்த சம்பவங்கள் ஒவ்வொன்ருக அப்பொழுது அவள் மனதில் தெளிவு பெற்றன. - ஒடிப் போய்க் கணவனின் அறையைப் பார்த்தாள். அங்கு ராஜேந்திரன் இருந்தால் அல்லவா? ஒடிப்போன சுவட்டிலேயே தன் உயிர்த் துணைவரின் காலில் விழுந்து, தன் தவறுக்கு மன்னிப்புக் கேட்கவேண்டுமென்றுதான் அப்படி அவள் விரைந்தோடினள். அறையில் கணவனக் காணுததும் அவள் ஏமாற்றமடைந்தாள். அவளே எள்ளி நகை யாடுவது போல மூலேயில் கவனிப்பாரற்றுக் கிடந்த பூப்போட்ட தலையணையை, அலங்கோலமாகக் கிடந்த பட்டுமெத்தையை, இமைக்காமல் பார்த்து நின்ருள் பூமா. நீர்முட்டிய விழிகளைக் கொண்டு சுவரின் எதிர்ப்பக்கத்தை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மணம்.pdf/119&oldid=835347" இலிருந்து மீள்விக்கப்பட்டது