பக்கம்:பூ மணம்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 & 9 சுவரில் படமாகத் தொங்கவிடப்பட்டிருந்த பெற்ருே ருக்குக் கடைசி வணக்கம் செலுத்தி வெளியேறினுள் மல்லிகா. அப்போது இளங்குழவியின் குவா குவா’ என்ற யாழ் ஒலி கேட்டது. குரலின் திசையைக் கண்டாள். அங்கு ஒரு குழந்தையையும் கண்டாள். என்ன அதிசயம் இது ! இந்த அகாலவேளேயிலே...குழந்தையின் தாய் எங்கே...? படியிறங்கிச் சுற்றுமுற்றும் பார்த்தாள். யாரும் இல்லை. யார் குழந்தை இது?... குழந்தையை ஒடிப் போய் வாரி எடுத்தாள். நிலவில் குளித்துக் கொண்டிருந்தது பேசும் பொற்சித்திரம். அது புன்னகையில் அவளிடம் பேசிற்று ; கண்ணுெளியில் அவளிடம் பேசிற்று. சிலநாள் முன் அவள் விஜயாவிடம் வேண்டிக் கொண்டது அங்ங்ணம் அவளது நினைவுக்கு வந்தது. அவள் விரக்திக்கு மாற்றம் தேடி வைக்கவா இக் குழந்தை... யார் குழந்தை இது ? இந்நிலையில் அவள் 'முடிவு?’ அவளே விட்டு ஓடியது. இந்த முடிவுக்கு என்ன சொல்வது...! வாழ்க்கையை அவளால் புரிந்துகொள்ள முடியவில்ஆல அப்போது. சியார் இப்படிக் குழந்தையைத் தனியே விட்டுச் சென்றிருப்பார்கள்’ என்று மூளையைக் குழப்பிக்கொண்ட அவளுக்கு விடை சொல்லுவது மாதிரி இருந்தது கீழே கிடந்த கடிதம். மேல்லிகா, உங்கள் அரவணைப்புக்குக் காத்திருக்கிருள் என் குழந்தை. எப்படியும் என் கணவர் ராஜேந் திரனிடம் சேர்ப்பிக்க முயற்சி செய்யுங்கள். கோடிப் புண்ணியம் உண்டு. இப்படிக்கு, பூமா.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மணம்.pdf/135&oldid=835382" இலிருந்து மீள்விக்கப்பட்டது