பக்கம்:பூ மணம்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

, 42 இப்படிப்பட்ட நிகல் கடந்த சில மாதங்களாகவே அவ. னிடம் இருந்து வந்தது. அவன் நெஞ்சத்தின் நெஞ்சம் அப்படி ஆளுல் ராஜேந்திரனது வெளி அழகையும் ஆடம் பரத்தையும் கண்டவர்களுக்கு அவன் அகத்தின் நிலை எப்படித் தெரியும் ? பார்க்கப் பகட்டாகக் குழைந்தாடு கிறது தாழம்பூ. ஆனல் அதனுள்ளே நெளிந்து ஊறுகிறதே. பூநாகம், அதைப்பற்றிய ரகசியம் யாருக்குத் தெரிய முடிகிறது ? பூமா நிரபராதி என்பதை ராஜேந்திரன் என்றும் அறிந்: தவன். சாதாரண நாளாக நல்ல மனசுடன் இருந்திருந்: தால் அவன் அப்படி அன்று பூமா-விஜயா-அவள் அத்தான் குமார் இவர்களுடன் சினிமா பாக்கப் போய் வந்ததற்கு ஒன்றும் சொல்லியிருக்கவே மாட்டான். ஆனல் அந்த நாட்களில் இனம் விளங்தாத ஒரு குறை-மனம் புரியாத, ஒரு குற்றம் அவனுக்குள் உருப்பெற்று, அந்தக் குற்றம் மனச்சாட்சி வடிவில் அவனே இன்னல் செய்தது. அனைத் திற்கும் காரணம் மல்லிகாவின் நினைவு. மல்லிகாவை மறந்து வேருெருத்தியைக் கலியாணம் செய்து கொண்டது ஏதோ பெரிய இமாலயத் தவறு ஒன்றை மல்லிகாவுக்கு. இழைத்துவிட்டதாகக் கருதின்ை அவன். அவன் மனம் அப்படி இடித்துக் காட்டியது. நாள் விடிந்து நாள் பிறந் தால் சதா சர்வ நேரமும் அவனுக்கு மல்லிகாவின் ஞாபகமே வாட்டிப் பிழிந்தது. சொல்லுக்குப் புறம்பானதொரு சஞ்சலம்-மீளவும் அதைப்பற்றிச் சிந்தித்து மல்லிகாவுக்கு அவன் நிஜமாகவே துரோகமா செய்தான் என்பது குறித்து ஆராய்ந்து முடிவுகட்ட முடியாததொரு சிக்கல்-இப்படிப் பட்ட வேதனைகள் அவனைச் சூழ்ந்துகொண்டன. மல்லிகா வுக்குத் தான் செய்தது துரோகமே என்ற முடிவான தீர்ப்புச் சொல்லிவிட்டது அவன் இதய சாட்சி. இதயம் விந்தை. வடியும் ஒரு விசித்திரச் சட்டப் புத்தகம். பிறகு......? அவன் மிருண்டு போஞ்ன் மதி புரண்டது. அப்பொழுது, தான் பூமாவை அவன் அடித்துப் போட்டுவிட்டு வீட்டைத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மணம்.pdf/148&oldid=835412" இலிருந்து மீள்விக்கப்பட்டது