பக்கம்:பூ மணம்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

141 திணித்துக்கொண்ட போதுங்கூட, அவன் சித்தப்பிரமை பிடித்தவன் போலத்தான் காணப்பட்டான். டைரக்ட ருக்கு அந்தரங்கக் காரியதரிசியாகப் பணியாற்றும் வேலே அவனுக்குரியது. காலப்பெண் அமைத்த முள்வேலியில் மாதச் செடிகள் சில அடக்கமாயின, மனித உள்ளம் ஒரு விசித்திர உலகம். உள்ளத்திலே பல ஆசைக் கனவுகள் தோன்றலாம். ஆனல் உலகிலே அந்த ஆசைக் கனவுகளில் ஒன்ருகிலும் என்ருே ஒரு நாள் பூர்த்தி பெறுவது உண்டு. அப்படிப்பட்ட நிலை ராஜேந்திர னுக்கும் வாய்த்தது. பொன்னை வாய்ப்பாக, பொருள் பொதிந்த வாய்ப்பாக, ‘சாலப் பற்பல நற்பகற் கனவில் தன்னை மறந்த லயந் தன்னில்’ நாட்கள் ஓடின. ராஜேந்திரன் உதவி டைரக்டர் ஆனன். கல்லூரி நாட்களில் நடக்கும் நாடகங்கள் அனைத்தும் பெரும்பாலும் அவனது டைரக்ஷனில்தான் நடந்தேறும். அந்நாளில் ஊறிய ஆர்வம் பெருகிவளர அற்புத வாய்ப்புக் கிட்டியது. பிஞ்சுப் பிராயத்தில் மணல் வீடு கட்டி விளையாடும் சிறு நிகழ்ச்சி தானே. பிறகு வாழ்க்கையின் அச்சாணி மண்டப மாக அமையவும் அடிகோலுகின்றது......! மீண்ட சுவர்க்கம். ஆனல் அதுவே இழந்த சுவர்க்க மால்ை..... - ராஜேந்திரன் சுயநினைவு பெற்ருன். நிரம்பி வழிந்த கண்களைத் துடைத்துவிட்டுக்கொண்டு நிமிர்ந்து உட்கார்ந் தான். அனுதினமும் இப்படித்தான் அவன் மனம் மாய்ந்து போவான். அவன் இதயம் அலைகடலாக, உருகும் எரிமலே யாகிவிடும். அவன் மனப்பாம்பு படமெடுத்துப் பயங்காட் டும். தாயைப் பறிகொடுத்த சேய் தனிமையில் கிடந்து ஏங்கி அழுவதுபோல, அவன் கண்ணிரை மாலே மாலே 'யாகப் பெருக்கித் தள்ளின்ை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மணம்.pdf/147&oldid=835410" இலிருந்து மீள்விக்கப்பட்டது