பக்கம்:பூ மணம்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 40 போக்கு, பாவனே எனக்கு அச்சம் விளைவிக்கிறது. தற் செயலாக இங்கு திரும்பியது கார். இல்லாதுபோகுல் உங்களே நாங்கள் சந்தித்திருக்கவே முடியாது......மறந்து விட்டேனே......ஆமாம் ; உங்களுக்கு பூங்குழலி-குண சீலன் கல்யாணப்பத்திரிகை கிடைத்ததல்லவா ? நாளே மறுநாள் இங்கு பட்டனத்தில் திருமணம். அதற்காகத் தான் எல்லோரும் கோயமுத்துரை விட்டுப் பட்டணம் வந்து விட்டோம்......நல்ல சந்தர்ப்பத்தில்தான் உங்களே யும் காண முடிந்திருக்கிறது.’’ - பூங்குழலி-குணசீலன் திருமணம் பற்றிய தகவல் ராஜேந்திரனுக்கு மிக்க மகிழ்வைத் தந்தது. ஆரம்பத்தி லிருந்து அவன் எதிர்பார்த்திருந்ததுவும் அதுவே தானே-! பூங்குழலிக்கும் தனக்குமிடையே நிலவிய நட்புப் பாசத் தொடர்பற்றிய ஞாபகங்கள் அவன் உள்ளத்தில் தோன் நின. சந்திரசேகரன் நீட்டிய திருமண அழைப்பைப் பார்த்தான். ஏற்கனவே ராஜேந்திரனுக்கு ம து ைர முகவரிக்கு ஒரு அழைப்பு அனுப்பப்பட்டு விட்டதல்லவா? ராஜேந்திரன் அவர்களிடம் தன் மகிழ்வைச் சொன் ன்ை. பூங்குழலியும் குணசீலனும் ஒருவரையொருவர் குறும்புடன் பார்த்துக்கொண்டார்கள். பூங்குழலியின் மன வைபவத்துக்குத் தான் இருக்கும் வாய்ப்பு கனிந்ததில் ராஜேந்திரன் பெருமகிழ்ச்சி அடைந்தான். சந்திரசேகரனிடம் ஒருநாள் உள்ளத்தில் உள்ளதைச் சொன்னுன் ராஜேந்திரன். அவர் புரிந்து கொண்டார். டைரக்டர் சந்திரமெளலிக்கும் அவன் பேரில் மிகுந்த பற்றுதல் ஏற்பட்டது. கோவை ஸ்டுடியோவில் அவனுக்கு வேலே கிடைத் தது. சென்னையில் சிலநாள் தங்கிவிட்டு அவன் புறப்பட் டான். பட்டணத்தில் ஒருநாள்கூட அவன் வெளியே செல்லவில்லே, தன் அ ண் ண ன் - அண்ணியைக்கூட மறந்துபோ னன். கோவை சென்று வேலைக்குள் தன்னைத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மணம்.pdf/146&oldid=835408" இலிருந்து மீள்விக்கப்பட்டது