பக்கம்:பூ மணம்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

139 விருக்காது. அப்படித்தான் அன்றும் ஏற்பட்டது. ராஜேந் திரனுக்கு அது கனவு போலவே தெளிவற்றிருந்தது. சந்திரசேகரன், அவரது மகள் பூங்குழலி, அவள் அத்தான் டாக்டர் குணசீலன், டைரக்டர் சந்திரமெளலி ஆகியவர் கள் இருந்தார்கள். இவர்களேயெல்லாம் ஒ ன் று ேச ர க் காண்பது உண்மையாகவே அவனுக்குக் கனவாகத்தான் தோன்றியது. மிஸ்டர் ராஜேந்திரன், என்ன இப்படிப் பார்க்கிறீர் கள் ? மழையில் கொட்டக் கொட்ட நனைந்துவிட்டீர்களே! மழை பெய்ததை நீங்கள் அறியமாட்டீர்களா? ஏன் இப்படி அடியோடு நீங்கள் மாறிவிட்டிருக்கிறீர்கள்...... ? و و . அவ்வளவு பேர்களிலும் பூங்குழலி முதன் முதலில் அன் புடன், குழைவுடன் ராஜேந்திரனுடன் பேசிளுள். அவள் பார்வை அவன் மீது மொய்த்திருந்தது. மேகம் விலகிய மங்கிய நிலவில் அவர்கள் அத்தனை பேரையும் ராஜேந்திரன் புதிதாகப் பார்ப்பதுபோலப் பார்த் தான். அந்தப் போலீஸ்கார நண்பரும் புன்னகைத்தார்: டைரக்டர் சந்திரமெளலி முறுவலித்துக்கொண்டிருந்தார். அவரை அவன் நன்ருக அறிவான். அவன் காலேஜில் நடத்திய நாடக விழாவுக்குப் பட்டனத்திலிருந்து வர வழைக்கப்பட்ட சந்திரமெளலிதான் தலைமை தாங்கினர். ராஜேந்திரனது நாடக வெற்றியைப் பாராட்டிப் போற்றி ஞர் அவர். ராஜேந்திரனுக்கு அப்பொழுதுதான் தன் நினைவு வந்தது. அதுவரை மழை கொட்டியிருக்கிறதென்பதும், மழையில் தான் தெப்பமாக நனேந்திருப்பதையும் அவன் உணரலாஞன்.

  • ராஜேந்திரன், தயவுசெய்து என்னுடன் வாருங்கள். வழியில் இந்த போலீஸ் நண்பரைச் சேர்த்துவிட்டு நேரே தம் ஸ்டுடியோவுக்குப் போவோம். அங்கு வந்ததும் உங்க்கிளப்பற்றிச் சொல்லவேண்டும். உங்கள் தோற்றம்,
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மணம்.pdf/145&oldid=835406" இலிருந்து மீள்விக்கப்பட்டது