பக்கம்:பூ மணம்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேச்சிருக்கட்டும், சாப்பிடு என்று அவள் பணித் தாள் அன்புமேவிய குரலில், உண்டு முடிந்தது; ஹாயாகக் கண்ப்புத் தீரச் சோபாவில் சாய்ந்திருத்தான் ராஜேந்திரன். அருகிலிருந்த நாற்காலியை இழுத்துப் போட்டுக்கொண்டு உட்கார்ந் தாள் மங்களம். அவள் ஒரு முறை அவனைத் தீவிரமாகப் பார்த்தாள். அவன் முகத்தில் கேள்விக் குறியொன்று கொக்கி போட்டிருந்தது. அவள் கேள்வி கேட்க முன் ராஜா, பி. ஏ. யும் படிச்சிப் பாசாகிவிட்டது. உன் வரை எங்களுக்கு இன்னும் ஒரே ஒரு கவலே மிஞ்சியிருக் கிறது, உன் கல்யாணம் பற்றித்தான் சொல்கிறேன். உன் அண்ணுவும் பல தடவை என்னிடம் கேட்டுவிட்டார். தை பிறந்ததும் முடித்து விட்டால் ரோம்பவும் நல்லது நீ என்ன் நினேக்கிருய்...??? - 'கல்யாணம்’ என்ற சொல்லேக் கேட்டதும், ராஜேந் திரனுக்குப் புதிய உணர்ச்சி, புதிய உள்ளம், புதிய நினைவு அவன் உள்ளத்தைப் பற்றிக் கொண்டது. முகத்தில் உள்ளம் பிரதிபலித்திருந்தது. புதிய உணர்ச்சி! புதிய உள்ளம்.! புதிய நினேவு! படிக்க எடுத்த மாப்பலான்’ நாவலே அப்படியே மூடி வைத் தான் அவன். அவள் அவன் மாற்றத்தைக் கவனிக்கத் தவறவில்லை. அண்ணி, கல்யாணத்திற்கு இப்போதென்ன அவ சரம்? மெதுவாகப் பார்த்துக்கொள்ளலாம். படித்து முடித்த சூட்டோடு சூடாக வேலே ஒன்றையும் தேடிக்கொண்டாக வேண்டும். நானும் நாலு ரெண்டு சம்பாதித்தால்தான் அண்ணுவுக்கும் கைக்குதவியாக இருக்கும். குடும்பத் திற்கும் நல்லது... அண்ணுவும் என்பேரிலிருக்கும் பாசத் தால்தான் இப்படிச் சதா என் திருமணத்தைப்பற்றிப் பேக கிருர். காலம் வரட்டும்; காத்திருக்கிறேன் அண்ணி, ’’

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மணம்.pdf/17&oldid=835454" இலிருந்து மீள்விக்கப்பட்டது