பக்கம்:பூ மணம்.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

量75 வேண்டிய ஏற்பாடு அது. அவனுக்கு எண்ணிப் பார்த்தால் ஆத்திரம் வந்தது. கண் கோடியில் நீர்ச்சொட்டுகள் தேங்கின. அண்ணுவும் அண்ணியும் இன்று வந்துவிடு வார்கள்’ என்று நினைத்துக் கொண்ட ராஜேந்திரனுக்கு துளிர்த்த துன்பக் கண்ணிர் கண் நொடிக்கும் போதிற்குள் ஆனந்தக் கண்ணிராகிவிட்டது. முன் தினம் பூங்குழலி, தன் அத்தான் தந்தை எல் லோருடனும் வருவதாக எழுதியிருந்த கடிதமும் நினைவில் இருந்தது. இன்பத்தை வளர்த்துவதற்கென்று ஒன்று சேர எப்படித்தான் இப்படிப்பட்ட சம்பவங்கள் தொடர் சேர்கின் றனவோ? ஆமாம்; இவையெல்லாம் இத்த ைநாள்வரை எங்குதான் வனவாசம்’ செய்தனவோ? ஒரே இதழில் முடியவேண்டிய வாழ்க்கைக் கதையை ஒரு நூறு இதழ் வரை தொடரச் செய்து வேடிக்கை பார்ப்பதற்காகவா இந்த நாடகமெல்லாம்? இதுதான் வாழ்க்கையா? இது தான் வாழ்க்கை நாடகமா? அல்லது இதுவேதான் நாடகத்தின் வாழ்க்கையுமா? -- சுவர்க்கடிகாரம் பத்தடித்தது. ஒலி அப்போது தான் அடங்கியது. அருகில்சென்ற ப்ளு மவுண்டன் எக்ஸ்பிரஸ், ரயில் ஓசை கிண்’ என்று ஒலிபரப்பியது. r மேஜைமீதிருந்த காலிங்பெல் ஒசைப்படுத்தப் பட்டது. பையன் ஓடிவந்தான் காபியுடன் போகும் வாக்கில் பெரிய விருந்துக்குக் குறிப்பு அவனிடம் அனுப்பப் பட்டது. வாழ்விலோர் திருநாள் என்று ரேடியோ இசை பாடியது. டைரக்டர் ராஜேந்திரனின் இதழ்கள் கட்ட விழ்ந்தன; அதில் சிரிப்பை எழுதி வைத்துக் கொண்டன. அன்றையத் தபாலில் மல்லிகாவிடமிருந்து அவள் படைத்த ஒற்றை ரோஜா நாவல் திரைக் கதைக்கென வந்திருந்தது. நாவலேத் தபாலில் கண்ட ராஜேந்திரனுக்கு ஒரே ஏமாற்றமாகிவிட்டது. இன்பக் கனவொன்று கண் டிருந்தான். ஆல்ை...! அப்படியென்ருல் மல்லிகாவை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மணம்.pdf/181&oldid=835480" இலிருந்து மீள்விக்கப்பட்டது