பக்கம்:பூ மணம்.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174 பட்டனவா? இதுவேதான் வாழ்க்கை விளையாட்டின் சட்ட திட்டமா? 'மல்லிகா: அன்று நம் இருவர் இதயமும் ஒன்ருகி, நம் முதல் காதலே வழிபட்டு வணங்கினேமே, அப்போது என் கண்களுக்குக் காட்சி தந்த அதே மல்லிகாவாக நீ இன்றுதான் என் நெஞ்சோடு நெஞ்சம் நின்று உறவாடு கிருய் ஒளி காட்டுகிருய்; என்னே மனிதனுக்கிவிட்டிருக் கிருய் அணு அணுவாக என் மனச்சாட்சி என்னைச் செல்லரித்துத் தின்று வருகிறது; நான் துரும்பாகிவிட்டேன். இனியும் மனத்திற்கு நான் பதில் சொல்லத் தெம்பில்லே. மனம் மருகுகிறது; மருள்கிறது; மாண்டுபோகிறது. தயை செய். அன்றைய என் பிஞ்சுக் காதலி மல்லிகாவாக நீ எனக்குக் காட்சி தந்து என்ன இதயங் கொண்டவனுக்கு. நீ பெண். கருணே காட்டு. அப்போதுதான் நான் பழைய ராஜேந்திரனுக முடியும்; மனிதனுக முடியும்; மனிதமனம் படைத்தவனுகவும் முடியும்; இனி என்றென்றும் நீ என் இதய மல்லிகாவாகச் செய். கடந்தது கண்ணிர்ப் புராண மாகி விடட்டும், வருங்காலம் வனப்பு வாய்ந்தது; கனவு நிறைந்தது. என் அமுதக் கனவுக்கு நல்வாக்கு நீ கொடுப் பாயா? துன்பம் நேர்ந்த என் வாழ்க்கையில் யாழெடுத்து நீ இன்பச் சுருதி சேர்க்கமாட்டாயா ?? கனவுக் காட்சிகள் பெருகி வளர்ந்தன. வாரி சுருட்டிக் கொண்டு எழுந்தான். பங்களாவின் மேல் மாடியில் வராந்தாவில் சற்று நேரம் உலவினன். படங்களில் பகைப் புலக் காட்சிகளைக் காட்டுவதைப்போல, அவனும் கடந்த நினேவுகளேக் காட்சிகளாக்கி, அக்காட்சிகளுக்கு உயிர் தந்து, உணர்ந்து பார்த்தான். தனித்த அவன் வாழ்வும்இணைந்த அவன் வாழ்வுக்குத் தொடர்பு சொன்ன பிறரது வாழ்வும் ஏடறியாச் சரித்திரத் தாளாகத்தான் ஆகிவிட் டிருக்கிறது. ராஜேந்திரன், தன் தமையன் ஆனந்தனுக்குப் புறப் கடும்படி தந்தி கொடுத்தான். என்ருே செய்திருக்கப்பட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மணம்.pdf/180&oldid=835478" இலிருந்து மீள்விக்கப்பட்டது