பக்கம்:பூ மணம்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§ 3

  • கல்யாணம்’ என்று மங்களம் ஆரம்பித்த வார்த்தை கள் ராஜேந்திரனின் இதய அடிவாரத்தில் சுரங்கம் வைக்கப்பட்டிருந்த ஆசையை, கனவை, நினைவை வெளிக்கிளப்பிவிட்டன.

சிறுமி மல்லிகா ஆடவந்த பொற்பாவைபோல அவன் மனக்கண்முன் ஆடினுள். அப்பொழுது ராஜேந்திரன் மூன்ரும் பாரத்தில் படித் தான். அந்த ஆண்டு புதிதாக ஒரு பெண்ணும் சேர்ந் தாள். அரைப் பரீட்சை முடிந்து மார்க்குகள் வாசிக்கப் பட்டன. அதில் அந்தப் பெண் மல்லிகாதான் முதல். ராஜேந்திரன் மலைத்துப் போனன். தனக்கு முதல் மார்க்கு கிடைக்குமென்று நினைத்துக் கொண்டிருந்த ஆசையில் மண்ணேத் துரவி விட்டாளே அவள் என்ற குறை அவனேப் பெரிதும் வதைத்தது. அன்று மாலே பள்ளி விட்டதும், அவனுக்குத் தேறுதல் கூறி நின்ருள் மல்லிகா. அவனுக்குச் சொல்லில் வார்க்க முடியாத அன்பு பெருக்கெடுத்தது மல்லிகாவின் மீது. பூமனத்தைப் போற்றியது பிஞ்சுமணம். புது நட்புறவில் இருவரும் நெருங்கிப் பழகினர்கள். இளம் உள்ளங்கள் இரண்டும் ஒரு மனதாய்ப் பின்னிப் படர்ந்தன, அன்பு-பாசம் என்ற கொழுகொம்பின் துணையால். அடுத்த பரீட்சையில் ராஜேந்திரனுக்குத்தான் முதல் ராங்க்: வேண்டுமென்று மல்லிகாவே விட்டுக்கொடுத்த ரகசியத்தை அவன் பிறகுதான் தெரிந்து கொண்டான். அடுத்த ஆண்டு விடுமுறை முடிந்து பள்ளிக்கூடம் போனதும், மல்லிகா வேறு ஜில்லாவுக்குப் போய்விட்ட சேதி ராஜேந்திரனுக்கு எட்டியது. செயலிழந்தான். கண்ணிருங் கம்பலேயுமாக அன்றையப் பொழுதை நழுவ விட்டான். திரும்பவும் மல்லிகாவைச் சந்திக்க அவனுக்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை. அவள் பிரிவில் பெரும் சூன்யம் தன்னுள் இடைவெளிப்பட்டிருப்பதை அவன் அடிக்கடி உணரலான்ை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மணம்.pdf/19&oldid=835500" இலிருந்து மீள்விக்கப்பட்டது