பக்கம்:பூ மணம்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Í 4 காலம் நிற்குமா, என்ன? மல்லிகாவை அவன் நினேக்கும்போதெல்லாம் எங்கோ படித்த ஒரு மணி நேரத்து உன்னத அழகி" என்ற வரிகள் நெஞ்சில் சிந்தும், ஒருக்கால், மல்லிகாவும்கூட ராஜேந் திரனுக்கு ஒரு மணி நேரத்து உன்னத அழகியாக அழகு காட்டி நிற்பதுடன் இருந்துவிடுவாளோ.. அவன் நெஞ்சுருகினன். சில மாதங்களே அவனுக்கு மல்லிகாவின் நட்புக் கிடைத்தது. அவையெல்லாம் சுவர்க்க நாட்களாயிற்றே! அத்தகைய கனவுலக நாட்கள் எப்போதும் அமையக் கூடாதா? அவை மீண்டும் திரும்பக்கூடாதா? மல்லிகா பிரிந்துவிட்டாள். பிரிவின் துயர் மிகப் பொல்லாதது. ஆனாலும், பழைய பாசத்தின் தொடர்பை வளப்படுத்தும் உாம்போலும் பிரிவு! இப்பொழுதெல்லாம் ராஜேந்திரனின் இதயம் முழுவதிலும் மல்லிகா அல்லவா ஆட்சி நடத்துகிருள்! இதை மல்லிகா அறிய சந்தர்ப்பம் கைகொடுத்து உதவினுல்...? அவளேப்பற்றி எதையும் தீர்ப்புக் கூற இயலவில்லே அவனுல். சற்றுமுன் , அண்ணி கல்யாணப் பேச்சை எடுத்ததும்: அவனுக்கு எடுத்த எடுப்பில் மல்லிகாதான் நினேவில் நடு நாயகமாக முன்தோன்றினுள். அடைந்தால் அவளேத்தான் அடையவேண்டும் என்ற வைராக்கியம் நெஞ்சில் வலுப் பெற்றது. ஆல்ை இந்த எண்ணத்தை எப்படிச் சொல்வது? மல்லிகா எங்கிருக்கிருளோ...? ‘மீ ண் டு ம் மல்லிகாவைக் காணும் பாக்கியம் பெற்ருல்...' என்று யோசித்துப் பார்க்க ராஜேந்திரனுக்கு. மகிழ்ச்சி மீறிக் கண்களில் கண்ணிர் முத்துக் கோர்த்தது. டில்லிகாவின் மீது அவனுக்கு இருந்த முதல் காதல்’ அது! அது அவனுடைய உள்ளத்தின் உள்ளமாக, உயிரின் உயிராக, துடிப்பின் துடிப்பாகப் பின்னப்பட்டிருந்தது. அவனது உள்ளத்தில், உயிரில், துடிப்பிலெல்லாம்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மணம்.pdf/20&oldid=835510" இலிருந்து மீள்விக்கப்பட்டது