பக்கம்:பூ மணம்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45 அவனுக்கு மூளை குழம்பிப்போனது துயரச் சுமையும் பளுக்கண்டது. அவன் சிந்தனே தீரவில்லை. சிந்திப்பு தால்தானே வாழ்க்கை துன்பக் குழப்பமாகி விடுகிறது ? வீட்டை விட்டு வெளியே எங்காகிலும் போகுல் தேவ லாமென் றிருந்தது. புறப்பட்டான். காலேயில் புறப்பட் டவன் மீண்டும் மனே மிதித்த சமயம், மேஜைமீது ஒரு கடிதம் அவன் பார்வைக்குக் காத்திருந்தது. கவரின் நுனி யைத் தாறுமாருகக் கிழித்தான். உள்ளங்கையில் பிடிபட்ட பொன் வண்டுபோல அக்கடிதம் கிடந்தது, படித்தான். திரு. ராஜேந்திரன் அவர்களுக்கு, உங்கள் கடிதம் கிடைத்தது. அதற்கு முன் னரே நான் தங்களுக்குத் தெரிவிக்கவேண்டுமென் றிருந்தேன். நான் நடனமாடச் சென்றபோது நான் கொண்டிருந்த என் முடிவு - தைரியம் உங்கள் முகம் கண்ட விடிையில் மண்ணேக் கவ்வி விட்டது. அதன் பின்னரே இக்கடிதம் எழுது கிறேன். மல்லிகா சிறுவயது முதலே என் சிநேகிதி. அவள் தங்களே மனமார நேசிப்பதைக் கதை கதையாக முன்னுரை, பின்னுரையெல்லாம் வைத்து எனக்கு இரண்டு நாள் முன்புதான் எழுதி யிருந்தாள். என் அன்புக்குப் பாத்திரமானவள் அவள் ; அவள் உங்கள் காதலுக்குப் பாத்திர மாகட்டும். ஆம்; ஒரு ஆடவன் நெஞ்சிலே ஒரே ஒரு பெண்தான் இடம் பெற முடியும். மல்லிகா பாக்கியவதி; கொடுத்து வைத்தவள்! இனி, பூங்குழலி உங்கள் இதயத்தில் சிநேகிதி 'யாகவேனும் இன்றுபோல என்றென்றும் உயிர் பெற்று வாழக் கருணை புரிவீர்களாக ! ஆனால்... லேலாவின் கண்களுக்கு கயாஸ் ஒருவன்தானே உலகமாகத் தோன்றமுடியும்...? -பூங்குழலி,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மணம்.pdf/51&oldid=835574" இலிருந்து மீள்விக்கப்பட்டது