பக்கம்:பூ மணம்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறப்புரை பத்திரிகை படிக்கும் வாசகர்கள் மாத்திரமின்றி புத்தகம் படிக்கும் வாசகர்களின் எண்ணிக்கை இப்போது தான் நாட்டில் மிகுந்து வருகிறது. அதிலும் நாவல்கள் படிப்பவர்களே அதிகம். என்ருலும் *புதுமைத் தமிழ் இலக்கியம்’ என்ற நோக்கோடு பார்த்தால் சிறுகதைகளின் வளர்ச்சியளவைக் கூட இது எட்டிப் பிடிக்கவில்லே. எண்ணிக்கையில் நாவல்கள் பெருகி வருகின்றன; அவற்றில் சிறந்த கற்பனைகள் சில இல்லாமல் இல்லை; ஆனல் பொதுவாகவே மதிப்பீடு செய்யும் அளவுக்கு அதன் வளர்ச்சி பெருகவில்லே என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். இப்போதையப் போக்கில் எதிர்காலத்தின் நம்பிக்கை தெரிகிறது. இந்த அளவில் நாம் பெருமை கொள்ளலாம். உலகத்திலேயே பதினெட்டு-பத்தொன்பதாம் நூற்ருண்டுகளேத்தான் நாவல் இலக்கியத்தின் உன்னத மான காலம் என்று சொல்கிருர்கள். மேலே நாட்டின் நாவல் இலக்கிய வளர்ச்சி பிரமிக்கத்தக்க ஒன்று. அந்த நாடுகளில் கூட இந்த நூற்ருண்டின் படைப்புகளைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மணம்.pdf/6&oldid=835593" இலிருந்து மீள்விக்கப்பட்டது