பக்கம்:பூ மணம்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 பற்றிக் குறை கூறுவோர் பலர் இருக்கிருர்கள், இந்த நிலையில் மேற்கத்தி உரை நடை இலக்கியங்களுடன் நம்முடைய இன்றையப் புதுத் தமிழ் கற்பனைகளே ஒப்பிட்டுக் குறை கூறுவது அறியாமையிலும் அறியாமை. இன்னும் நமது அடிப்படையே செப்ப -னிடப்படவில்லை. நாவல் இலக்கியத்தின் குழந்தைப் பருவமென்ருே, தளர்நடைப் பருவமென்ருே இன்றை யப் போக்கைச் சொல்லலாம். புதிய விழிப்பு இன்று தோன்றியுள்ளது. பொழுது போக்குத் தன்மை போதாதென்று வாசகர்கள், எழுத்தாளர்கள், வெளியீட்டாளர்கள் அனைவரும் உணரத் தொடங்கிவிட்டார்கள். தரத்தில் உயர்வு; எழுத்தில் அழுத்தம்; கற்பனையில் வளம் பெருக வேண்டுமென அனைவரும் நினைக்கும் நாள் இது. ஆகவே எழுத்தாளர்களும் சற்று அதிகமான உழைப்பை மேற்கொண்டு எதிர்காலத்தில் நம்பிக்கை பிறக்கக்கூடிய கற்பனைகளை உருவாக்கத் துடிக்கிருக்கள். எந்த இலக்கியப் படைப்புக்குமே அதற்குரிய శ్రీ 6) { .ெ பா. ரு ள் அநுபவத்திலிருந்துதான். பெறவேண்டும். சிறுகதைகளுக்குக் குறைவான அதுபவம் போதும். நாவல்களுக்கு அது போதாது. குறைந்த அநுபவத்தைக்கொண்டு சிறந்த நாவல்களைப் படைத்தவர்கள் சிலர் உண்டு. அவர்களால் ஒன்ருே இரண்டோ நாவல்கள்தாம் எழுத முடிந்தன. தொடர்ந்து எழுத முடியவில்லை. மூலப்பொருள் நிறைந்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மணம்.pdf/7&oldid=835614" இலிருந்து மீள்விக்கப்பட்டது