பக்கம்:பூ மணம்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{ திருந்தாலல்லாது நாவல்களில் வெற்றி பெறுவது எளிதல்ல, யாரோ ஒர் அன்பர் உலகத்து இலக்கியங்களை யெல்லாம் நாவலாசிரியன் கரைத்துக் குடித்திருக்க வேண்டும் என்று பொருள் கொள்ளும் வண்ணம் தாம் படித்த மேல் நாட்டு நாவல்களின் பட்டியலே அடுக்கி யிருந்தார். அந்த அளவுக்குப் புத்தக அறிவு பண்டிதர் களுக்குத் தேவைப்படலாம். எழுத்தாளன் தனக்குத் தேவையானவற்றைப் பொறுக்கிப் படித்து வழித்துறை களே மட்டும் அறிந்து கொண்டால் போதும். மூலக்கருப் பொருளே எந்தப் புத்தகங்களிலுமே தேடவேண்டிய அவசியமில்லே. வாழ்க்கையில் ஒன்றி அதைக் கூர்ந்து. கவனிக்கத் தொடங்கிளுல் எவ்வளவோ கிடைக்கும். இப்போது இந்த நாவலுக்கு வருவோம். இந்தப் பூ மணத்தின் மெல்லிய மனத்தைச் சற்று மெதுவாக முகர்ந்து பார்ப்போம்: இது நண்பர் பூவை எழுதிய காதல் கதை, நகர வாழ்க்கையின் சூழ்நிலையில் படித்த பெண்கள் சிலரின் மனப்போக்கை ராஜேந்திரன் என்ற கதாநாயகனை உரை கல்லாக வைத்து நமக்கு வெளிப்படுத்துகிருர். காதலேப் பெறுவதற்காக ஒவ்வொருவரும் அநுபவிக்கும் இன்ப துன்ப உணர்ச்சிகள் இரக்கத்துடன் சித்திரிக்கப் பெற்றிருக்கின்றன. மூன்று பெண்களின் மனப்பாங்கும் மூன்று விதமாக அமைந்து அவரவர்களின் தனித் தன்மையைக் காட்டுகின்றன. இந்தப் பெண்களிடம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மணம்.pdf/8&oldid=835636" இலிருந்து மீள்விக்கப்பட்டது