பக்கம்:பூ மணம்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 ராஜேந்திரன் பழகும் முறையில் இன்றைய வாழ்வில் நாம் சாதாரணமாகக்காணும் ஒரு பட்டதாரிஇளைஞனேக் காண்கிருேம். குறைவும் நிறைவும் கூடிய இளைஞன் அவன். மூன்று பெண்களும் அவனேக் காதலிக்கிருர்கள். ஒருத்தியின் விருப்பம் மற்றவளுக்குத் தெரியாது. தெரிந்தபோது, தன் தோழிகளுக்காக வழி விடுகிருள் ஒருத்தி; மற்ருெருத்தி வெற்றியுடன் அவனே மணக் கிருள்; மூன்ருமவள் மனத்தை மாற்றிக்கொள்ள முடியாமல், இறுதி வரை உறுதியுடன் தன் கற்பனை யைப் போற்றுகிருள். ஆண் மனம் இயல்பாகவே வெளி அழகில் மயங்கி பெண் மனத்தை அறியாது பேதலிக் கிறது. ஆனல் பெண்ணுள்ளமோ?... இந்த நாவலில் வரும் மல்லிகாவை நமது அன்புக்கு முதலிடம் கொடுக்கும் வண்ணம் அமைத்திருக்கிறர் ஆசிரியர். அந்த மல்லிகையின் மனம் நாவலின் பெரும் பகுதியில் லேசாகச் சுழன்று பிறகு இறுதியில் குபீரென்று பொங்குகிறது. காதல் உயர்ந்தது; அதைவிட உயர்ந்தது தியாகம்; தியாகத்தில்தான் அது உண்மை யாக வெளிப்படுகிறது என்பதைத் தன் வாழ்க்கை யால் வெளியிடுகிருள் மல்லிகா, பூமணம் என்ற தலைப்பே அந்த மெல்லிய மல்லிகை மலருக்குக் கொடுக்கப்பட்ட தலைப்புத்தான். ராஜேந்திரன் சபலம், அவன் தன் முதற் காதலைப் .புறக்கணிக்கும் போதும்-அவனுடைய சந்தேகம், அவன் தன் மனைவியைத் தவருக நினைக்கும் போதும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மணம்.pdf/9&oldid=835655" இலிருந்து மீள்விக்கப்பட்டது