பக்கம்:பூ மணம்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 டேயிளேக் கண்ணுேட்டமிட்ட பூமாவுக்குப் பெருமை பிடிபடவில்லே. அன்று பட்டனத்தில் எல்லோருமாக எக்ஸிபிஷனுக் குக் காரில் போய்வந்த சம்பவத்தில் அவள் சிந்தை சென்றது. தன்னையும் தன் கணவரையும் சாடை காட்டி மங்களம் கேலி செய்த முழு விபரத்தையும் நினைத்துப் ஆதரித்தாள் பூமா. அங்கிருந்து புறப்பட்ட சமயம் தன் கைகளில் வெள்ளிப் பாலடை ஒன்றைத் திணித்துவிட்டு * இது என் நினைவுப் பரிசு’ என்று மங்களம் சிரித்த நிகழ்ச்சி யும் அவளுக்கு நினைவில் வந்தது. இன்ப நினைவுகள் அவளேத் தன்னேயும் மறக்கச் செய்து, பலமாகவும் சிரிக்கச் செய்தன. அவள் சிரித்தாள். சிரிப்பின் பண் கேட்ட ராஜேந்திரன் திரும்பிஞன். அவன் கண்களின் திரை விரிப்பிலே அவன் மனைவி பூமா சுழன்று கொண்டிருந்தாள். அழகுப் பாவையாக, அழகு மோகினியாக, அழகின் திருமகளாக, தன் திருமணத் துக்கு ஆசிச் செய்திகள், வாழ்த்துக்கள் அனுப்பியிருந்த வர்களுக்கெல்லாம் நன்றி சொல்லிக் கடிதம் எழுதிக்கொண் டிருந்த அவன் கைப் பேணுவைக் கையிலே பிடித்தவாறு அப்படியே உட்கார்ந்துவிட் டான். இவ்வுலக ஞாபகமே அவனுக்கு அற்றுவிட்டிருக்க வேண்டும். மாயமோகினி பூமாவின் தரிசனம் அவனே அப்படிச் செய்து விட்டது. அவன், கண்ணிவைக்க விரித்த வலேயைச் சுருக்கவே இல்லை. அவன் பார்த்துக் கொண்டேயிருந்தான். அவளும் பார்த்துக்கொண்டே யிருந்தாள்! அப்போது தான் ஒருவரை யொருவர் புத்தம் புதிதாகப் பார்த்துக்கொண்டவர்களேப் போல, நல்ல தம்பதிகள்...! அன்று முதல் இரவில் அவன் கண்ட பூமாவை அப் படியே அப்பொழுதும் பார்த்துக்கொண்டிருந்தான். அதே ஆடை அணிகலன்கள். அதே அலங்காரம், அன்று ராஜேந்திரன்-பூமா தம்பதிகளை அறிமுகப்படுத்திவைக்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மணம்.pdf/98&oldid=835673" இலிருந்து மீள்விக்கப்பட்டது