பக்கம்:பூ மணம்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

93 நட்பாளனாக இருந்த அதே முதல் இரவு, இன்று அவர் களது நன்றிக் கடிதத்தை வைத்துப் பெருமைப்பட்டுக் கொண்டிருந்தது. பூந்தோட்டத்தில் பறிக்கப்படாத முல்லே மலர்களேப் போல விண்மீன்கள் கண்ணடித்துக் கொண்டிருந்தன. இரவும் மங்கையும் போதைப் பொருள்கள். ராஜேந்திரன் தலே கிறுகிறுத்தது. ரேடியோவைத் திருப்பினுள் பூமா. ...உந்தன் மோடி கிறுக்குதடி மொந்தைப் பழைய கள்ளைப்போலே...! அவன், உயிர்த்துனேவியைப் பார்த்துப் பாடியிருக்க வேண்டிய வரிகள் அவை. அவன் நிலே அப்படி: புளகிதமும் புல்லரிப்பும், அன்பும் ஆதரவும், பெருமித மும் எக்களிப்புமாக ராஜேந்திரன்-பூமா தாம்பத்தியம் வாழ்க்கையில் அங்கம் அ ங் க ம க ப் பண் பெற்றுத் திகழ்ந்தது. கண் நிறைந்த கணவனின் அமுதச் சூழ்நிலை யில் அவள் முன் பூலோக சுவர்க்கமே உருப்பெற்றிருந்தது. அவள் கனவும் அதுவே தானே ! நனவாகிடும் கனவு என்ருலே அதன் விலே அதிகம்தான் போலும் ! எல்லாக் கனவுகளுமே நனவானுல்...எல்லா நணவுகளுமே கனவின் களத்திற்குப் பக்குவமால்ை...... அதுவேதான் பூலோக சொர்க்கமா...! *。 ஒரு நாள்... புள்ளினம் கூடுகளில் தஞ்சம் தீ கதியே என்று அடைக்கலம் புகக் கூடிய பொழுது அலுவலகம் முடிந்தது. நண்பர்களிடம் சொல்லி விட்டுப் புறப்பட்ட ராஜேந்திரன் மனே மிதிக்கும் தருணம், தெருவிளக்குகள் ஏற்றிய விளக்குகளாகப் பெருமையுடன் நகைமுகங்காட்டி நின்றன. முகப்பரப்பில் பனிபெய்திருந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மணம்.pdf/99&oldid=835675" இலிருந்து மீள்விக்கப்பட்டது