பக்கம்:பூ மணம்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 மணிகளே விரல் முனயிஞல் வருடி விட்டவாறு மாடிப்படி யேறிக்கொண்டிருந்தான். அப்போது அவன் காதுகளில் சதங்கை ஒலி கேட்டது. திரும்பினன். பார்வை கீழே தாழ்த்தப்பட்டது. அடுத்த வீட்டுடன் இணைந்திருந்த கூடத்தில் அவன் கண்ட காட்சி...! கனவுபோலத் தெரிந்தது அக்காட்சி; ஆனல் அது அவனது கண்கள் காட்டிவிட்ட கனவுக்கோலமே தவிர, வேறில்லே. அங்கு பூ நடனமாடிக் கொண்டிருந்த அபிநயபாவத்திற்குகந்த முறையில் அவள் விரல்கள் முத்திரை காட்டின; அவள் இதழ்க் கோணத்தில் அழகு ரோஜா ஒன்று அப்பொழுது தான் மலர்ந்து கொண்டு வந்தது. அவள் நெஞ்சம் எக்களிப்பில் உயர்ந்தது ; தணிந்தது. அவளிடமிருந்து பெருமூச்சு விடை சொல்லிக்கொண்டு பிரிந்தது.

  • எக்ஸ்லெண்ட் டான்ஸ் ஏ ஒன், ஹஹ்ஹா...!!?? நாட்டியம் தடைப்பட்டது நின்றது. திரும்பிள்ை பூமா. அரும்பிக்கொண்டிருந்த பனித்திரையை விலக் கி விடக்கூட நினேவற்றவளாக, தன் ஆட்டத்துக்குத் தன் கணவரே சர்டிபிகேட் தரும் சந்தர்ப்பத்தை அவள் எப்படி எதிர்பார்த்திருப்பாள்? ஏனென்ருல், வழக்கம்போல வரும் நேரத்திற்கு அரைமணி முன்னதாக அன்று ராஜேந்: திரன் ஆபீசைவிட்டு வந்துவிட்டான்.

பூமா தலைகுனிந்து கொண்டாள். நாணம் அவள் தேவழியாக நின்று அவளைப் பேச வொட்டாது செய்து விட்டது. ஆனல் அவள் தோழி விஜயாவின் விளே பாட்டை......! என் சிநேகிதி விஜயாவுக்குத் தெரிந்த ஒரு பெண், பள்ளிக்கூடத்தில் ஆண்டு விழாவில் டான்ஸ் ஆடவேண்டு மாம். விஜயா சொன்னாள். நான் இன்றைக்கு சொல்லிக் கொடுத்தேன்...நீங்கள் வந்ததை அறிந்துதான், விஜயர் என்னிடம்கூடச் சொல்லாமல் கம்பி நீட்டி விட்டிருக்கிருள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மணம்.pdf/100&oldid=835310" இலிருந்து மீள்விக்கப்பட்டது