பக்கம்:பூ மணம்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

95 'நான் பாக்கியவான், நாட்டியம் தெரிந்தவளே மனைவியாகப் பெற.?? 'நானும் பாக்கியவதி, என் நாட்டியத்தை ரசிக்கத். தெரிந்தவரைப் பதியாக அடைய..?? நாட்கள் வந்தன; வந்த நாட்கள் போயின. காலண் டரும் கடிகாரமும் அதற்குச் சாட்சி சொல்லின, காலம் ஒடிக் கொண்டிருந்தது. அடுத்த வீட்டு வாசலில் ஜட்கா ஒன்று வந்து நின்றது. பூமா கண் பார்வையைத் திருப்பினள். இளேஞன் ஒருவன் 'ஜம்’மென்று வந்திறங்கினுன், 'வாங்க அத்தான் என்ற வரவேற்புடன் விஜயா ஓடி வந்து நின்றதைப் பார்த்ததும், பூமாவுக்கு அவர்கள் நட்பு-உறவு தெரிந்தது. விஜயாவுக்குகந்த விஜயன் தானே? - மத்தியானம். மீனாட்சி அம்மன் கோவிலிலிருந்து உச்சிக்கால மணி ஓசை காற்றில் மிதந்து வந்தது. விஜயா வந்தாள். விஜயா, உன் அத்தான் விஜயத்தில் அங்கேயே ஐக்கியமாகி விடுவாயோ என்று சந்தேகப்பட்டுவிட் டேன்’ என்ருள் பூமா கேலியாக. கேலியிருக்கட்டும், அக்கா. குமார்-அதுதான் அவர் பெயர். பி. காம். படிக்கிருர், லீவுக்கு வந்திருக்கிருர். அடுத்த வாரம் மெட்ராஸ் போய் விடுவார்...??

  • அது சரி ; இப்போது அவரிடம் இல்லாமல் நீ வந்து

விட்டாயே : பாவம் தனிமையில் அவர் தவித்துவிடப் போகிருர், ஊம் ; ஒடு...விஜயா.’’ இப்போது போகவேண்டாம். அவர் தூங்குகிரு.ர்.*

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மணம்.pdf/101&oldid=835312" இலிருந்து மீள்விக்கப்பட்டது