பக்கம்:பூ மணம்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

gó

  • புரிகிறது. அதற்குத்தான் என்னேத் தொந்தரவு செய்ய வந்து விட்டாயாக்கும். பேஷ் !’’

போங்கள், அக்கா: அடடே, கோபிக்காதே விஜயா. உன் தனிமைக்கு முற்றுப்புள்ளியிட என்றைக்கு நாள் பார்த்திருக்கிருய்? இரட்டையராகப் போவது என்று ??? விஜயாவிற்குப் பூமாவின் கலாட்டாப் பேச்சுப் புரியாமலா போய்விடும் ? அவள் முறுவலித்தாள். புரிகிறது, சரியான ஜோடிதான்.?? 'தை பிறந்ததும்- ? வழி பிறந்து விடுமென்கிருயா? ரைட்டோ..?? 'அக்கா , நீங்கள் நிச்சயம் சினிமாவிற்கு வசனம் எழுதலாம். ' 'ஊஹல்ம் , அது வேண்டாம், சினிமாவில் நடிக்கக் கொஞ்சம் சிபாரிசு செய்ய முடியுமா ? ? என்று கேட்ட ஆமா, கணத்தில் கலீரென்று சிரித்துவிட்டாள். விஜயாவும் சேர்ந்து சிரித்தாள். சிரிப்பும் சிரிப்பும் பின்னின. இதயமும் இதயமும் நட்புத்தளையில் இணைவது போல. அன்று மாட்னி ஆட்டத்திற்கு விஜயாவும் அவள் அத்தான் குமாரும் புறப்பட்டார்கள். அத்துடன் பூமாவை யும் வற்புறுத்தித் தன்னுடன் கூட்டிச் சென்ருள் விஜயா. பூமாவுக்கு, அவள் வார்த்தைக்கு எதிர்வார்த்தை சொல்ல முடியவில்லே, புறப்பட்டாள். ஆபீஸ் முடிந்து ராஜேந்திரன் வரும்போது, ஆட்டம் முடிந்து ஜட்காவினின்று இறங்கிய மூவரில் தன் துணைவி ஆமாவும் இருப்பதைக் கண்டான். விஜயாவுடனிருந்த இளைஞனே ஒரு முறை பார்த்துவிட்டு உள்ளே நுழைந்தான். கணவனின் நடத்தை பூமாவுக்குப் பயத்தை அளித்தது. கணவனின் உத்தரவன்னியில் பிறருடன் படத்திற்குட்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மணம்.pdf/102&oldid=835314" இலிருந்து மீள்விக்கப்பட்டது