பக்கம்:பூ மணம்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

97 போனது குற்றம் என்ற விஷயம் அவளுக்கு அந்தக் கணந்: தான் புலயிைற்று. அவளது உடலில் மின்னலுணர்வு கொதித்தெழுந்தது. காரணத்தை விளக்கிக் கூறித் துணை வரிடம் சமாதானம் கூற அன்று முழுதும் பூமா துடித்துப் போளுள். ஆனால் அதைப்பற்றி ராஜேந்திரன் பேச்சையே துவக்கவில்லை. அதுவரைக்கும் பூமாவுக்கு நிம்மதி...! அன்றைக்கு நாடகம் ஒன்றுக்கு ராஜேந்திரனும் பூமாவும் வீட்டைவிட்டுப் புறப்பட்டு, காத்துக் கொண் டிருந்த ரிக்ஷாவில் ஏறப் போளுர்கள். அப்பொழுது: ரிக்ஷாவில் கடந்து சென்ற ஒரு பெண் உருவத்தைப் பார்த்தான் ராஜேந்திரன். பார்த்ததுதான் தாமதம், அவன் அப்படியே தரையில் நினவிழந்து சாய்ந்துவிட் டான். இதைக் கண்ட பூமா அப்படியே அதிர்ச்சியடைந்து விட்டாள் ; அவள் தலே சுற்ற ஆரம்பித்தது. இத்தகைய திரும்பு முனேக்குக் காரணமான அந்தப் பெண் வேறு: யாருமல்ல-பாவம், அவள் அபலே மல்லிகா !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மணம்.pdf/103&oldid=835316" இலிருந்து மீள்விக்கப்பட்டது