பக்கம்:பூ மணம்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

:பதின்மூன்று: வீட்டுக் கிரகணம் விண்ணிடை தேங்கிக் கிடக்கும் ஒற்றைத் தார கையைப்போல, மேஜைமீது விரித்திருந்த பட்டுத் துணியில் தவழ்ந்து கிடந்தது அந்தப் பாலடை. அது மங்களம், பூமாவுக்கு ஒருநாள் நினைவுச்சின்னமாக அளித்த பரிசு, பூமா பெருமூச்சு விட்டாள். வெள்ளிப் பாலடையை விழித்தகண் மூடாமல் நோக்கிக்கொண்டிருந்தாள் அவள் ; பாவிடை பசலேயாக அவள் நேத்திரங்களில் சிலம்பம் ஆடியது. பார்வையை இரும்பாகக் கொண்டு, காந்தமாகிக் கிடந்த அந்தச் சஞ்சிகையின் விரிந்த ஏடுகளில் அவள் கருத்துப் பதிந்திருந்தது. 8...ஒன்று இரண்டாக மாறிக் கலப்பதில்தான் உவகையும் இன்பமும் விண்கிறது என உலகம் கருதலாம். ஆனல் அந்த இரண்டு தரும் இன்பத்தைவிட அந்த இர்ண்டு மூன்ருகும் போதுதான் உடலளவில் உறைந் திருந்த இன்பம், உயிரிலேயும் கலந்து உண்மை இன்பமாக காறுகிறது. அதுவே மூன்ருவது உருவம்-குழந்தை!...”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மணம்.pdf/104&oldid=835318" இலிருந்து மீள்விக்கப்பட்டது