பக்கம்:பூ மணம்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

99 கருவைவிட்டு வெளிவந்த குழந்தையின் மலர்ச் சிரிப்புக்கு ஈடேது, இணையேது? அதைப்போல பூமா சிறுநகை இயற்றினுள் அவள் முகத்தில் ஆனந்தம் மடி யேந்தியிருக்கிறது. அந்த இன்பம் இரண்டு, மூன்ருனயின் பிறந்த இன்பம்...! சென்னைக்கு மங்களத்துக்குத் தபால் ஒன்று எழுதிப் போட்டுவிட்டு வந்தாள் பூமா. கடிதத்தில் சுவைச்செய்தி? ஒன்று பறந்துகொண்டிருந்தது. பூமா, ஐந்து மாதங் களாகக் குளிக்காமல் இருக்கிருள், அவள் தாய்மை: எய்தியிருக்கிருள் என்பதே கடிதத்தின் சாரம். கடிதத்தைப் பார்த்ததும், அங்கே அக்காளும் மைத் துனரும் கொள்ளைச் சந்தோஷத்தில் மூழ்கி விடுவார்கள் என்பதாக நினைத்துப் பார்த்தாள் அவள். உண்மை ! அவர்கள் கட்டாயம் மகிழ்ச்சி பொங்க நிற்பார்கள்தாம் ; அவர்கள் குடும்பத்தின் பெயர் சொல்லவல்ல ஒரு குஞ்சு? இன்னும் அவர்களுக்கு உண்டாகவில்லே. மங்களத்திற்குக் கல்யாணமாகி ஆண்டுகள் பல ஒடிவிட்டது தான் மிச்சம். அவள் கருத்தரிக்கவில்லை. இந்நிலேயிலே அவர்கள் குடும் பத்தில் குலச்சுடர் ஒன்று ஒளிகாட்டப் போகிறதென்பது மகிழ்ச்சிக்குரிய செய்திதான்! தான் கருத்தரித்திருக்கும் செய்தியை எப்படிக் கணவ னிடத்தில் சொல்வது என்பதைப்பற்றி வெகுவாகச் சிந்தித் தாள் பூமா. அவளுக்கு அவ்விஷயத்தைப் பேச்செடுப் பதற்கு என்னவோ நாணமாக இருந்தது. அதுபோல மலேப்பாகவும் இருந்தது. காரணம், சிலநாளாக அவள் தன் துணேவரிடம் கண்டதொரு மாற்றமேயாகும். அன்றைக்கு பூமா, பக்கத்து வீட்டுப் பெண் விஜயா, அவள் அத்தான் இவர்களுடன் சினிமாவுக்குப் போனதி லிருந்து, அங்கு அவள் வீட்டில்-கொண்ட கணவனிடத் தில் ஏதோ ஒர் பிளவு-மாற்றம்-ஒரு மாயத்திரை படர்த் திருப்பதாக ஊகித்துக்கொண்டாள். அவள் ஊகம் சரி:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மணம்.pdf/105&oldid=835320" இலிருந்து மீள்விக்கப்பட்டது