பக்கம்:பூ மணம்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

! {}{} என்று வலுவுற அத்தாட்சிபோல கணவன்-மனேவிய ரிடையே அந்த ஒரு கிரகணம் முளேத்துவிட்டிருந்தது. இவ்வளவிற்கும் ராஜேந்திரனுக மனேவியின் முகம் பார்த்து ஒன்றும் கேட்கவில்லை. அதுதான் இப்படி யென்றல், பூமாவும் தன் குற்றம்பற்றிச் சொல்லி மன்னிப்புக் கோரவுமில்லே. ராஜேந்திரன் அச்சம்பவத்தைத் தவருக எண்ணியதற்கு விளக்கமாக எதுவும் வாய் திறந்து அவள் கூறத் தெம்பு ஊறவில்லே. இருப்பினும் அது அவளுக்கு, மனதை உறுத்திய வண்ணமிருந்தது. உள்ளத் துய்மை யுடன் யாருடனும் சகஜமாகப் பழகும் சுபாவம் கொண் டவள் பூமா. ஆனதால், அவளுக்குத் தான் அன்னியருடன் படத்திற்குப் போனதற்கு இப்படிப் புருஷன் மாறிவிட்டாரே என்பது விசித்திரமாகப் பட்டதில் அதிசயமில்லை. அவள் மனம் அப்படி ; அவள் போக்கு அப்படி அவள் பூமா ! அன்று சாயந்திரம் காபியை எடுத்துக்கொண்டு கணவனின் அறைக்குள் நுழைந்தாள். காலேயில் படித்த விகடத்துணுக்கைக் கணவனிடம் சொல்லி அச்சிரிப்பிலே தானும் பங்குகொள்ள எண்ணியது அவள் மனம். இப்படிப் பட்ட சம்பவங்கள் பல நடந்திருக்கின்றன. ராஜேந்திரனும் பூமாவும் குலுங்கக் குலுங்கச் சிரித்திருக்கிறர்கள். சாய்வு நாற்காலியில் ஏதோ சிந்தித்த வண்ணம், உறக்கமும் விழிப்புமில்லாத நிலையில் சாய்ந்திருந்த ராஜேந் திரன், பூமா வந்து நிற்பதைப் பார்த்தும் பார்க்காதது போலிருந்தான். இதைக் காணப் பூமாவுக்கு அழவேண்டும் போலாகிவிட்டது. ஏன் இந்தப் பாராமுகம், அனலேப் போர்த்தும் சாம்பல்போல...? காபி ஆறிவிடப் போகிறது. சாப்பிடுகிறீர்களா ? : ஊம்?’ என்ற பதிலுடன் காபியை ஏந்திப் பிடித்து வாங்கி வாய்க்குள் ஊற்றிவைத்தான் அவன். ஆம் றித்தான் வைத்தான். ருசிக்கவில்லை. குடித்து முடிந்: ததும் மறுமுறை ஒரு ஊம் போட்டு, டயராவைத்தரையில் 兖、

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மணம்.pdf/106&oldid=835322" இலிருந்து மீள்விக்கப்பட்டது