பக்கம்:பூ மரங்கள்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்டுத்தி மரம் 159 அடியில் பருத்திருக்கும். பூத்து முடிந்தபின் இலை மறு படியும் தோன்றும். ஜனவரி முதல் மார்ச் வரை இலை யற்றிருக்கும். தீப் போன்ற பூக்கள் பளபளப்பான ஆரஞ் சுச் சிவப்பு நிறமானவை. புறவிதழ் கறுத்து கிளி மூக்குப் போல வளைந்திருக்கும். கொத்துக் கொத்தாகப் பூக்கள் ஏப்ரல், மே மாதங்களில் தோன்றும். சற்று மஞ்சள் நிறப் பூக்களை உடைய வேறு ஒரு வகையும் காணப்படுகின்ற தென்பர். மரத்தின் மேல்பாகம் முழுதும் பூக்களால் நிறைந்து மரம்பற்றி எரிவதுபோல கோடைக் காலம் ஆரம்பிக்கும்போது தோன்றும். கனி: கனிகள் ஒற்றை விதையுடையன; தொங்கிக் கொண்டிருக்கும்; நரம்புகள் தெரியும்; வெளிர்ப் பச்சைப் பிஞ்சு முதிரும்போது மஞ்சள் கலந்த பழுப்பு நிறமாக இருக்கும். அதைச் சுற்றி ஒரு வெள்ளிய மயிர் காணப் படும். கனி ஜூன் மாதத்தில் காற்றில் அடிப்பட்டுச் சிதறும். இம்மரம் மூடுபனிக்கும் வெப்பத்திற்கும் அஞ்சாது உப்பு நிலத்திலும் வளரும். மரம் சிறந்த விறகாகும். இலைகள் உணவு பரிமாறப் பயன்படும். பட்டை தோல் பதனிட உதவும். மரப் பிசின் காபிபோல் சுறுசுறுப்பு தரும். பூக்கள் சாயம் போட உதவும். வேரில் உள்ள நார் கயிறு திரிக்கப் பயன்படும். விதை சுத்தமான எண்ணெய் தரும். பூங்காவில் கும்பல் கும்பலாக வளர்ப் பதற்கு ஏற்றதொரு மரம். தோட்டக் குறிப்புகள்: புது விதைகளிலிருந்து வளர்க் கலாம். கனியிலிருந்து எடுத்தவுடன் விதையை முளைக்கப் போடவேண்டும். நாற்றுகள் வெயில் நாளிலும், மழை நாளிலும் பட்டுப்போகும். 2 அல்லது மூன்று ஆண்டு களுக்குக் கன்றை வளர்த்துப் பின் நடவேண்டும். மிகவும் மெதுவாக வளரும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மரங்கள்.pdf/165&oldid=835824" இலிருந்து மீள்விக்கப்பட்டது