பக்கம்:பூ மரங்கள்.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜமெளவா யூஜினியா கஸ்பிடாட்டா குடும்பம் : மிர்ட்டேசியே பொதுவாக வழங்கும் இந்தியப் பெயர்: ஜமெளவா யூஜினியா என்பது யூஜின் என்ற சவாய் நாட்டு இளவரசரைக் குறிக்கிறது. அவர் 17ஆம் நூற்ருண்டில் தாவர அறிவில் ஊக்கம் காட்டினர். வளருமிடம்: வட இந்தியாவில் அதிகம். புது தில்லியில் சாலே ஒரமாக வளர்க்கப்படுகின்றது. இயல்புகள் நடுத்தர உயரமுள்ள தழைத்த மரம். மஞ் சள் நிறத்தண்டும், நிழல் பரப்பும் பளபளப்பான பச்சை நிற இலைகளும் பரந்து வளரும் கிளைகளும் உள்ளது. மார்ச் மாதத்தில் பழைய இலேகள் உதிர்ந்து, தளிர்கள் தோன்றும். இளந்தளிர் மிக அழகானது. கனி புளிக்கும், நாவல் கனியைக் காட்டிலும் சதைப்பற்று குறைவானது. ஜூலே, ஆகஸ்டு மாதத்தில் காய் முதிரும். சாலை ஓரங் களுக்கு ஏற்ற மரம். காச்ர்ை, அமல்டாஸ், ஜாக்ராண்டா முதலிய மரங்களுடன் கலந்து நடுவதற்கு ஏற்ற மரம். மரம் எளிதில் ஒடியும். தோட்டக் குறிப்புகள் : விதையிலிருந்து பயிரிடப்படும். மெதுவாக வளரும். இளங்கன்று மூடுபனியில் வளராது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மரங்கள்.pdf/196&oldid=835887" இலிருந்து மீள்விக்கப்பட்டது