பக்கம்:பூ மரங்கள்.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடம்ப மரம் ஆந்தோசெபாலஸ் கடம்பா பழைய பெயர் (ஒத்த பெயர்) ஆங்தோசெபாலஸ் இண்டிகஸ் குடும்பம் : ரூபியாசியே வேறு பெயர்: கடம் பொதுவாக வழங்கும் இந்தியப் பெயர்கள்: சமஸ்கிருதம், இந்தி, T === வங்காளி, குஜராத்தி, j கடம்பா மராத்தி கன்னடம்-கடவாலா மலேயாளம்-ஆட்டுதேக் தமிழ்-கடம்பு (வெண்கடம்பு) தெலுங்கு-கடம்பமு வளருமிடம்: இந்தியாவின் வெப்பம் மிக்க பகுதிகளே இதன் தாயகம். இமயமலே அடிவாரத்திலிருந்து, நேபாளத்திலிருந்து பர்மா வரையிலும், வட சர்க்காரி லிருந்து மேற்குத் தொடர்ச்சி மலே வரையிலும் பரந்து காணப்படும். இயல்புகள்: கிருஷ்ணனுடன் தொடர்புடைய மரம். பண்டைய நாளில் ஏறத்தாழ 2,000 ஆண்டுகளுக்கு முன் மதுராவிலிருந்து பரத்பூர்வரை உள்ள பிருந்தாவனம் இம்மரங்களால் நிறைந்து இருந்தது என்பர். இந்த இடத்தில் சில மரங்கள் இப்போதும் உள்ளன. இது 30 அடி உயரமும் 5-7 அடி வரை அகலமும் உள்ள பெரிய மரம். பந்து போன்ற மஞ்சள் பூக்கள் பரந்த மரக் கிளைகளிலிருந்து தொங்கும். இலைகள் 5-9 அங்குல நீளமானவை, பளபளப்பானவை. அடிப்புறத் தில் நுண்மயிர் அடர்ந்திருக்கும். பூக்கள் சிர மஞ்சரியில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மரங்கள்.pdf/201&oldid=835899" இலிருந்து மீள்விக்கப்பட்டது