பக்கம்:பூ மரங்கள்.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லிக்னம் விட்டே கயாக்கம் ஆபிசினேல் குடும்பம் : சைகோபல்லேசியே வேறு பெயர்: கம்கயாக்கம், உயிர் மரம் 'கயாக்கம்’ என்பது ஹோயக்சகன் என்று மெக்சிகோ நாட்டுப் பெயரை ஒட்டியது. ஆபிசினேல் என்பது 'மருத்துவத் துறையில் ஏற்றுக் கொள்ளப்பட்ட' என்று பொருள்படும். எலிக்னம் விட்டே என்ருல் வாழ்விற்குத் தேவையானது என்று பொருள். இதைப் பிரேசில் மரம் என்றும் கூறுவர். வளருமிடம்: மேற்கு இந்தியத் தீவுகளைச் சேர்ந்தது. பம்பாய், சென்னே, பங்களுர், ஹைதராபாத் முதலிய இடங்களில் இம்மரம் காணப்படும். இயல்புகள் : என்றும் தழைத்திருக்கும் பெரிய புதர் போன்ற மரம் ; அடிமரம் வளைந்திருக்கும்; மரப்பட்டை மேடு பள்ளங்களாக இருக்கும். சிறிய 4-6 சிற்றிலைகளால் ஆன கூட்டிலை; பச்சையானது; சிற்றிலைகள் காம்பின்றி இணைந்துள்ளன; நடு நரம்பு மெல்லியது. பளபளப்பான நீலப் பூக்கள் மார்ச், நவம்பர் மாதங்களில் கொத்தாகத் தோன்றும். பூ நிறம் நல்ல நீலத்தில் இருந்து வெளிர் நீலமாக மாறும். பூக்களின் நிறம் பச்சையிலேகளுடன் அழகாகத் தோன்றும். பிஞ்சு ஒழுங்கான உருவம் ஏதும் இன்றிப் பச்சை நிறத்தில் இருக்கும். தட்டையானது; முதிரும்போது மஞ்சளாகும். இதன் பட்டையில் இருந்து கிடைக்கும் பிசின் மருந் தாகப் பயன்படும். மரம் வலியது; கனமுள்ளது; நீரில் அமிழ்ந்துவிடும். கப்பலுக்கும், உருளே, ரூல்தடி பந்தெறி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மரங்கள்.pdf/216&oldid=835929" இலிருந்து மீள்விக்கப்பட்டது