பக்கம்:பூ மரங்கள்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வசந்தம் மலர்ந்தது . 强莎 “எத்தனையோ பெண்கள் வயிறு எரியாமலா இருந்திருப் பாங்க! பணம் போச்சு என்று தெரிஞ்க எத்தனை பெண்கள் வயிறு எரிஞ்சு...' "மடத்தனமாப் பேசாதே. நிறுத்து' என்று சீறி விழுந் தார் அவர். 'இராதா மடத்தனமா! உங்க நீலாவதி பேசிளுல்தான் புத்திசாலித்தனமாக இருக்கும்!’ என்று கிண்டல் செய்தாள் மனைவி. பண்ணையார் எரிந்து விழலாமா, வேண்டாமா என்று யோசிப்பவர்போல் உட்கார்ந்திருந்தார். பிறகு வெற்றிலைச் செல்லத்தைக் கையில் எடுத்துக்கொண்டு, பட்டு லேஞ்சியை எடுத்துக் கழுத்தில் மாட்டியபடி கிளம்பிவிட்டார். "வீளு இந்தக் கழுதைகிட்டே வாய் கொடுப்பானேன். சுத்த மண்டு கம்!’ என்று நினைப்பவர்போல், செருப்பை மாட்டிக்கொண்டு டக்டக் கென்று நடந்து வெளியேறினர் பண்ணையார். இவ்விதம் விட்டுக் கொடுக்கும் சுபாவம் தான் அவரது குடும்ப வாழ்க்கையைச் சுலபமாக ஒட வைத்தது என்பது அவருக்கே தெரியும். "நம்ம இஷ்டம்போல் காரியங்கள் நடக்கா இல்லையா! பின்னே எதுக்கு கால் துட்டுக்குப் பிரயோ ஜனமில்லாததுக் கெல்லாம் மூச்சைக் கொடுக்கனும் என்பது அவரது சித்தகத் தம்! - அவருக்கு வழியனுப்புதலாக ஒலித்தது பொன்னம் மாளின் பேச்சு: நீலாவதியைப் பார்க்காமே, நீலாவதிக்கு ஆறுதல் கூருமத்தான் உங்களாலே இருக்க முடியாதே. போங்க! அவ காத்துக்கிட்டு இருக்கப்போரு!’ அவளது கிண்டல அவர் உணராமல் இல்லை. சந்திர னைப் பார்த்து நாய் குலைக்கு!’ என்று நெஞ்சோடு புலம்பிய படி நேராக நடந்தார் பண்ணைப் பிள்ளைவாள்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மரங்கள்.pdf/46&oldid=836044" இலிருந்து மீள்விக்கப்பட்டது