பக்கம்:பெண்களும் பேரழகு பெறலாம்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 டாக்டர் எஸ். நவராஜ செல்லையா 6. 5வது பயிற்சிக்குப் போல நிற்கவும். நன்றாக மூச்சை இழுத்துக் கொள்ளவும். குனிந்து வலது கையால் இடது காலைத் தொடவும். பக்க வாட்டிற்குக் கைகள் வந்தவுடன் மூச்சை விடவும். பிறகு மூச்சை இழுத்துக் கொண்டு, இடது கையால் வலது கால் கட்டை விரலைத் தொடவும். இவ்வாறு மாறி மாறித் தொட வேண்டும். (15 முறை) முடிந்த வரை முழங் கால்களை வளைக் காமல் P 7. கால்களை அகலமாக வைத்து நிற்கவும். கைகள் இரண்டும் பக்கவாட் டில் விறைப்பாக நீட்டி இருக்க, நன்றாக மூச்சை இழுத்துக் கொள்ளவும். இடுப்பை முறுக்குவது போல, (Twist) இடது கை முதுகுப் புறமும் வலது கை மார்புப் புறமும் இருப்பது போல வைத்து சிறிது நேரம் கழித்து முன் நிலைக்குக் கொண்டு வந்து மூச்சை விடவும். (பயிற்சி 3 படம் பார்க்கவும்) இடதுபுறம் திரும்பும்போது இடது கை விரல்களை கண் பார்ப்பதுபோல திரும்பவும். வலப் புறத்திற்கும் வலப்புறம் திரும்ப வேண்டும். (20 முறை) o இந்தப் பயிற்சியைப் பழகுவதற்கு முன், படத்தில் உள்ளது போல் கைகளை வைத்து, இடுப்பைச் சுற்றி ஒரு கை இருக்குமாறு வைத்துப் பழக வேண்டும். 8. ஒரடி அகலத்துடன் கால்களை வைத்து நிற்கவும். கைகள் இரண்டையும் மார்புக்கு முன் நீட்டி இருக்கவும். நன்றாக மூச்சை உள்ளுக் கிழுத்துக் கொள்ளவும். முழங்கால்களை (அரைப் பகுதி மடித்துக் கொண்டு) ஒரு முக்காலியில் உட் கார்ந் திருப்பது போல்