பக்கம்:பெண்களும் பேரழகு பெறலாம்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெண்களும் பேரழகு பெறலாம் 71 உருவிழந்து போன இடையழகைக் கண் டு, மனதுக்குள்ளே பொரு மாத பெண் மணிகளே இல்லையென்றே கூறலாம். வந்து விட்ட பெரிய இடையை விரட்டி அடிக்க முயன்று, வருத்தத்துடன் தோல்வியை ஒப்புக் கொள்கின்ற, ஒப்புக் கொண்ட பெண்களும் பலர் உள்ளனர். வேறு வழி இல்லாமல் திகைக்கும் போது, வீடு தேடி வரும் பத் திரிக்கைகளில் விளம்பரங்களைக் காணுகின்றனர். பிறர் காணாமல் பரிட்சை செய்து பார்க்கின்றனர். முடிவு தோல்விதான். பல பேரிடம் அணுகி வழிமுறைகளைக் கேட்கின்றனர். என்ன செய்வது? முயற்சிகள் தான் தொடர்கின்றனவே அன்றி, அணுவளவும் முன்னேற்றமில்லை. இடையளவோ இம் மியும் குறைவில்லை என்று உணர்ந்து ஏக்கப் பெருமூச்சுடன் காலங் கழிக்கின்றனர். அவர்கள் கையாளுகின்ற ஒரு சில முறையற்ற வழிகளைக் கீழே காணுங்கள். 1. கொழுப் புச் சத்தினால் இடை, கொழு கொழுவென்றும் கொழ கொழ என்றும் போய் விடுகிறது என்பதனால், கொழுப்புச் சத்தைக் குறைக்கின்ற மாத்திரைகளை (Pils) உட்கொண்டு, உடற் சதையைக் களைய முயல்கின்றனர் ஒரு சிலர். ஆனால், அத்தகைய மாத் திரைகள் அவர்களுடைய குடல் பகுதிகளைக் கெடுத்துவிடும் என்பதை அவர்கள் அறியாத நிலையிலிருக்கின்றனர். எப்படியாவது மெலிந் து விட வேண்டும் என்ற அவசரமும் , Ն H | so o ஆவேசமும் தான் முக்கியமான காரணமாகும்.