பக்கம்:பெண்களும் பேரழகு பெறலாம்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெண்களும் பேரழகு பெறலாம் 79 பயிற்சி 3 கால் களை விறைப் பாக நீட் டி (கண்ணாடியிருந்தால் கண்ணாடி முன்னால் முதுகு இருப்பது போல் நிமிர்ந்து உட்காரவும். நன்றாக மூச்சை இழுத்துக் கொள்ளவும். பிறகு, இடுப்பை வளைத்து, பின்புறம் திரும் பிப் பார்க்கவும். (கால் களை அசைக்கவோ, அகற்றவோ மாற்றவோ கூடாது) சிறிது நேரம் கழித்து மூச்சை விடவும். வலப்புறம் இடப்புறம் என மாறி மாறித் திரும்பவும். (30 முறை) (பக்கம் 60ல் உள்ள படம் போல) பயிற்சி 4 இடுப் பில் கைகள் இருக் குமாறு காலை நீட்டி தரையில் உட் காரவும். நன்றாக மூச்சை இழுத்துக் கொள்ளவும். ஒரு கால் தரையிலே இருக்க, மற்றொரு காலை மட்டும் மெதுவாக (சமநிலை இழக்காமல்) மேலே உயர்த்தவும். சிறிது நேரம் கழித்து கால் கீழே வந்ததும் மூச்சுவிடவும். இடது கால், வலது கால் என்று மாறி மாறிச் செய்யவும். (20 முறை) இதே பயிற்சியை, நின்று கொண்டும் செய் லாம். காலைத் தூக்குவதற்கு முன், மூச்சிழுத்து, கால் கீழே வந்ததும் மூச்சை விடவும். ஒரு கால் விட்டு ஒரு கால் என மாறிச் செய்யவும். (20முறை) பயிற்சி 5 கால்களை அகலமாக வைத்து நிற்கவும். கைகள் இரண்டும் மார்புக்கு முன்னே நீட்டி இருக்கவும். நன்றாக மூச்சை இழுத்துக் கொண்டு முடிந்த வரை வளைந்து சென்று, கீழே குனிந்து (கால்களை