பக்கம்:பெண்களும் பேரழகு பெறலாம்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 டாக்டர் எஸ். நவராஜ செல்லையா மடக்காமல்) இரு கால்களுக்கும் இடைப்பட்ட இடத்தைக் கைகளால் தொடவும். சிறிது நேரம் கழித்து முன்னிருந்த நிலைக் கு கைகள் சென்றதும், மூச்சை விடவும். (15முறை) இதே பயிற்சியை நன்றாகப் பழகிய பின் கால்களுக்கு இடைப் பட்ட நடுத் தரையைத் தொடுவதற்குப் பதிலாக இன்னும் உடலுக்குப் பின்னால் எவ்வளவு தூரமான இடத்தைக் குனிந்து தொடமுடியுமோ, அவ்வளவு தூரம் கைகளை நீட்டி முழங்கால்களை மடக்காமல் தொடவும். (20முறை) மூச்சு விடும் முறை முன் போலவேதான். பயிற்சி 6 தோள் அளவு இடைவெளி இருக்குமாறு கைகளைத் தரையில் ஊன்றி பாதங்களால் தரைக்கு இணையாக நின்று மூச்சை இழுத்துக் கொள்ளவும். பிறகு தரையோடு தரையாகக் கீழே போய் மேலே வந்து மூச்சு விடவும். (10 முறை)