பக்கம்:பெண்கள் விளையாடினால் என்ன ஆகும்.pdf/147

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


I 45 சிட்டாட்டத்தில் நிபுணராக விளங்கிய ஒரு ஜெர்மன் நாட்டினர், ஒரு புதிய முயற்சியை மேற் கொண்டார். அந்த முயற்சியில் அகில உலக சாதனை புரிய வேண்டும் என்ற வேட்கையுடன் ஈடுபட்டார். அதாவது, ஒரு சீட்டுக்கட்டினை எடுத்துக் கொண்டு, அதைக் கலைத்து விட்டு, பிறகு ஒரு மாதிரியான வரிசையில் அடுக்கிப் பின் மீண்டும் கலைப்பது என்பது தான் முயற்சி. இப்படியாக அவர் ஒவ்வொரு நாளிலும் 10 மணி நேரம் அடுக்கி அடுக்கிக் கலைத்தார். ஒரு நாளைக்கு 10 மணி நேரம் என்று 20 வருஷங் களாக சீட்டுக் கட்டுடன் சேர்ந்து பணியாற்றினார். அதாவது அவர் 42,46,028 முறை கலைத்தார், சேர்த்தார், அடுக்கினார். அற்புதமான சாதனை தா ன . ஆனால் அந்தப் பெருமையை அனுபவிக்க அவரால் முடியவில்லை. ஆமாம், லீபான் என்ற அந்த ஜெர்மானிய சாதனை வீரர், பைத்தியமாகி விட்டார். சீட்டாட்டத்தை மகிழ்ச்சிக்காகப் பயன் படுத் தினால் சந்தோஷம் உண்டு. சமாதானம் உண்டு. செல்வாக்கும் செழுமையும் உண்டு. மாறாகப் பயன் படுத்தினால், லீபான் கதிதான் ஆகும் என்று எச்சரிக்க நமக்கு உரிமையிருக்கிறது. ஏனென்றால் சரித்திரம் கூறும் உண்மை அது தான்.