பக்கம்:பெண்கள் விளையாடினால் என்ன ஆகும்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

144

இவற்றிலே, மிகவும் பிரபலமாக ஆடக் கூடிய நான்கு சீட்டாட்ட வகைகள், உலக நாடுகளில் அரங்கேறிக்கொண்டு வருகின்றன. அவைகள் பிரிட்ஜ், பினாகிள், போக்கர், ரம்மி என்பவையாகும்.

ஆட்டத்தில் எத்தனை வகை இருந்தாலும் எத்தனை பிரிவுகள் திரிந்தாலும், அவைகள் எல்லாமே ஆட்டக்காரர்கள் அனைவரையும் கவர்ந்திழுக்கும் கவர்ச்சிக் கன்னிகள் போன்றவைகளாகும். ஆட்டத்தில் மயங்கியவர்கள் அகிலத்தையே மறந்து போகின்றார்கள்.

அவர்கள் ஆனந்தத்தின் உச்சியில் உலவுகின்றார்களா, ஆழ்ந்த சிந்தனை வானில் சிறகடித்துப் பறக்கின்றார்களா, அல்லது போட்டியில் வெற்றிபெற வேண்டும் என்று வெறியில் புதையுண்டு போகின்றார்களா என்பது பற்றி நாம் சிந்திக்க வேண்டியது நமக்கு வேண்டாத வேலையாகும்,

ஆனந்தமாகப் பொழுது போக்க நமது அறிவின் திறத்தை ஆராய்ந்து பார்க்க, சிந்திக்கும் ஆற்றலை வளர்த்துக் கொள்ள சீட்டாட்டம் ஒரு சிறப்பான ஆட்டமாகும். இந்த எண்ணத்துடன் ஆடினால், இது சோற்றுக்கு உப்பாக சுவை தரும். உப்பையே சோறு என உண்ண நினைத்தால் உண்பவரின் நிலை என்ன ஆகும்? இதோ ஒரு உதாரணம்.