பக்கம்:பெண்கள் விளையாடினால் என்ன ஆகும்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

46

ஒட்டப் பந்தயமாகும். இதில் சுவையான சேதி: ஒன்று உண்டென்றால், பெண்களுக்காக நடந்த 8 போட்டி நிகழ்ச்சிகளில் 5 போட்டிகளில் ஒரு அமெரிக்கப் பெண் வெற்றி பெற்று சிறந்த வீராங்கனை என்ற புகழடைந்தாள். அவளது.பெயர் பேபி டி டிரிக்ஸ்.

1936ம் ஆண்டு பெர்லின் எனும் நகரத்தில் ஒலிம்பிக் பந்தயங்கள் நடைபெற்றன. இப்போட்டிகளில் ஸ்டெல்லா வெல்ஷ், ஸ்டெல்லா ஸ்டீபன் என்னும் இரண்டு வீராங்கனைகள், தங்கள் திறமையை வெளிப்படுத்தியது மட்டுமன்றி, பெண்கள் விளையாட்டுப் போட்டிகளுக்கு உரியவர்கள்தான், அவர்களால் எதுவும் முடியும் என்பதை நிரூபித்துக் காட்டினர்.

அவர்களையும் மிஞ்சி நின்றாள் ஒர்ஆரணங்கு, இரண்டு குழந்தைகளுக்கு தாயான அவள், 1948ம் ஆண்டு லண்டனில் நடந்த ஒலிம்பிக் பந்தயங்களில் கலந்து கொள்ள வந்தாள். 4 தங்கப்பதக்கங்களை வென்று வாகை சூடினாள்.அதாவது, 1936ம் ஆண்டு,நடைபெற்ற ஒலிம்பிக் பந்தயத்தில் 4 தங்கப்பதக்கங்களை வென்ற உலக மகாவீரன் ஜெசி ஒவன்ஸ் என்ற வீரனுக்கு இணையாக,இந்தத் தாய் வீராங்கனையும் வென்று தங்கப்பதக்கம் பெற்றாள். டச்சுநாட்டின் பறக்கும் தாய்’ என்ற பட்டப் பெயரையும் பெற்றாள். அவள் நாடு திரும்பியபோது, ஹாலந்து நாட்டு ராணியே ரயில்