பக்கம்:பெண்கள் விளையாடினால் என்ன ஆகும்.pdf/49

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


47 நிலையம் வந்து சாரட்டுத் தடபுடலுடன் எதிர் நின்று வரவேற்றுக் கெளரவம் அளித்தாள். அப்படிப்பட்டப் பெருமைக்கு ஆளான அந்த வீராங்கனை திருமதி ஃபேனி.பிளாங்கர்ஸ் கோயலி என்பவள். இந்த நிகழ்ச்சியானது பெண்களின் விளையாட்டுத் துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டது. பெண்கள் தாயாகி விட்டாலும் கூட அவர்களது திறமையும் வலிமையும் பறிபோய்விடவில்லை. பாழாகிப்போவதில்லை. என்பது நிரூபணமாகிவிட்ட தால், பெண்கள் பேரளவில் ஆர்வமுடன் பங்கு பெறும் வாய்ப்பு உலகெங்கும் ஏற்பட்டது. அத்தகைய எழுச்சி இந்தியாவிலும் ஏற்பட்டது என்றால் ஆச்சரியமாக இல்லையா? வெட்கத்திற் கும், நாணத்திற்கும், குடும்பப் பாங்கிற்கும், சமுதாயக் கட்டுப்பாட்டுக்கும் இலக்காகி, அடக்க முற்று கிடக்கும் இந்தியப் பெண்மணிகளில் இருவர், இந்திய நாட்டின் சார்பாக ஒலிம்பிக் பந்தயங்களில் கலந்து கொண்டனர். வெற்றி பெற்றார்களா என்பது வேறு விஷயம். ஆனால் போட்டியிட்டனர் என்பதே பெருமைக்குரிய விஷயம் தானே! மேரி டி சூசா, என். கோஷ் என்னும் இரு பெண்மணிகளும் 100 மீட்டர் ஓட்டத்திலும், 80 மீட்ட தடைதாண்டி ஒடும் ஒட்டத்திலும் பங்கு பெற்று, இந்தியப் பெண்மணிகளின் தைரியத்தை யும் திறமையையும் பாரெங்கும் பறை சாற்றினர்.