பக்கம்:பெண்கள் விளையாடினால் என்ன ஆகும்.pdf/5

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.

முன்னுரை


பெண்கள் விளையாடினால் என்ன ஆகும் ?

இந்தத் தலைப்பை நான் தேர்ந்தெடுத்ததன் காரணம்... இப்படிப்பட்ட கேள்வியைத் தான், மனித இனம் பல நூறு ஆண்டுகளாகக் கேட்டுக் கொண்டிருக்கிறது என்பதால் தான். இதற்கான பதிலே ஒருவரிடம் கூறினால் மட்டும் போதுமா? இதனை ஒரு வரியிலேயே கூறிவிட முடியுமா? அதற்காகத்தான், ஒரு புதிய நூலையே உருவாக்கிவிட வேண்டுமென்ற வேட்கையில் எழுதத் தொடங்கினேன்.

பெண்களின் உடல் அமைப்பு மென்மையானதுதான். ஆனால், அதற்குள்ளே அடங்கிக் கிடக்கும் ஆற்றல் அளவிடற்கரியது. ஆண்களை விட சற்றும் அதிகமானது.

எந்த தட்பவெப்ப நிலையிலும், எந்த விதமான வாழ்க்கைச் சிக்கல் மிகுந்த சூழ்நிலையிலும், அசாதாரண பலத்தோடு அனுசரித்துப் போகின்ற ஆற்றல். பெண்களுக்கு கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது.

மண்ணுலகின் வாழ்க்கை முறைகளில் தான் போட்டியா என்றால், விண்ணுலகப் பயணத்திற்குக் கூட வீராவேசமாக வந்து பெண்கள் நிற்கின்றார்கள்.