பக்கம்:பெண்கள் விளையாடினால் என்ன ஆகும்.pdf/51

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


49 பாடு, பெண்களின் விளையாட்டுக்களில் வியக்கத் தகு மாற்றங்களை உண்டு பண்ணின. 1968ம் ஆண்டு மெக்சிகோ நகரில் போட்டிகள் நடைபெற்ற போது செக்கோசுலோவோகியா நட்டைச் சேர்ந்த வீரர் காசியாவஸ்கா என்னும் சீருடற் பயிற்சிகளில் சிறந்த வீராங்கனையாக (ஜிம்னாஸ்டிக்ஸ்) 7 தங்கப் பதக்கங்களை வென்றாள். 1972ம் ஆண்டு மியூனிக்கில் நடந்த போட்டி களில், ரினேட் ஸ்டெக்ஸ் எனும் கிழக்கு ஜெர்மனி நாட்டினள், ஒட்டப் போட்டிகளில் இரண்டு தங்கப் பதக்கங்கள் வென்று விழி ப் பு ண ர் ச் சி யை ஊட்டினாள். 1976ம் ஆண்டு மான்ட்ரியல் எனும் இடத்தில் நடைபெற்ற ஒலிம்பிக் பந்தயங்களில், 14 வயதே நிரம்பிய ருமேனிய நாட்டுச் சிறுமி 5 பதக்கங்களை வென்றாள். நீச்சல் போட்டிகளில் 4 தங்கப்பதக்கங் களை வென்றாள் கிழக்கு ஜெர்மனியைச் சேர்ந்த கொர்னிலியா எட்னர் என்பவள். == பெண்கள் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டார்கள். வெற்றி பெற்றார்கள் என்றால், அது மிகவும் சாதாரணமானசெய்தியாகும். அவர்கள் நிகழ்த்திய சாதனைகள் எல்லாம், ஆண்