பக்கம்:பெண்கள் விளையாடினால் என்ன ஆகும்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

54

பெண்கள் ஆண்கள் போட்டியிடும் எண்ணிக்கையை மட்டும்தான் எட்டிப் பிடித்து விட்டார்களா என்றால், அது மட்டுமல்ல. அநேகப் போட்டி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்கள். அது மட்டுமல்ல. வலிமையுள்ள ஆண்கள் சாதிக்கின்ற விளையாட்டு சாதனைகளையும் எட்டிப் பிடிக்கவும் ஒட்டி நிற்கவும் கூடிய நிலைமைக்கு அல்லவா உயர்ந்து விட்டிருக்கின்றார்கள்.

ஆமாம். ஒரு சில போட்டி நிகழ்ச்சிகளையும். அவற்றில் ஆண்களின் உலக சாதனைகளையும். பெண்கள் புரிந்த உலக சாதனைகளையும், கீழே கொடுத்திருக்கிறோம். இதன்மூலம் ஒரு கருத்தை, நம்மால் புரிந்து கொள்ள முடியும். உலக அரங்கிலே ஒருநாள் ஆண்களின் சாதனையை பெண்கள் சாதனை மிஞ்சினாலும் மிஞ்சக்கூடும் என்பதுதான். ஆண்கள் அஞ்சும் காலம் வரத்தான் போகிறது.