பக்கம்:பெண்கள் விளையாடினால் என்ன ஆகும்.pdf/58

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


56 மேலே காணும் வெற்றிச் சாதனைகளின் பட்டியலைப் பாருங்கள். ஆண்களின் சாதனைகளை விட பெண்களின் சாதனைகள் அதிக தூரமோ அதிக நேரமோ இல்லை. எட்டியும் ஒட்டியும் தான் இருக்கின்றார்கள். சாதனைகளைப் பார்க்கும் பொழுது, ஆண் களின் சாதனை உயர்ந்த அளவில் இருக்கலாம். ஆனால் இன்னும் குறுகிய காலத்தில், இப்பொழுது இருக்கும் சாதனை இடைவெளி இன்னும் குறையும். ஏனெனில் பெண்களின் சாதனைகளின் வேகம் என்றும் குறையவில்லை. நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டேதான் வருகிறது. அதாவது பலவீனப் பட்ட இனம் என்று வருணிக்கப்படும் பெண்ணினம் தான், வலிமையான இனம் என்று புகழ்படும் ஆண் இனத்தின் சாதனைகளை மிஞ்சும் வகையில் அடிக்கடி மாற்றி எழுத வைக்கிறது. உலக சாதனை களின் உச்ச வரம்பும் உயர்ந்து கொண்டே போகிறது. உதாரணத்திற்கு சில கருத்துக்களை இங்கே காண்போம். 1928ம் ஆண்டு 100 மீட்டர் ஓட்டத்தில் இருந்த ஆண்களின் சாதனையைவிட இன்றைய சாதனை 0.7 வினாடிகள்தான் குறைந்திருக் கின்றன. ஆனால் பெண்களின் ஒட்டச் சாதனை 1 நிமிடம் 2 வினாடிகள் குறைந்திருக்கின்றன. பெண் ணிகளின் வேகம் பெரிதுதான்.