பக்கம்:பெண்கள் விளையாடினால் என்ன ஆகும்.pdf/62

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


60 1896ல் பெண்கள் ஓடிய மாரதான் ஒட்டத்தின் சாதனை நேரம் 5 மணியில் இருந்தது. இப்பொழுது 2 மணியாக இறங்கி வந்திருக்கிறது. ஆமாம் ஆண்கள் ஒடும் நேரத்திற்கும் பெண்கள் ஒடும் நேரத்திற்கும் இடையிலே 30 நிமிடங்கள்தான் வித்தியாசம் இருக்கிறது. இன்னும் நாளாக நாளாகக் குறைந்து கொண்டேவரும் என்று விளையாட்டு வல்லுநர் களும் விஞ்ஞான பூர்வமாக ஆராய்ச்சி செய்கின்ற நிபுணர்களும் கணித்துக் கூறுகின்றார்கள். எண்பத்தி நான்கு ஆண்டுகளுக்கு முன்பே பெண்கள் மாரதான் ஒட்டத்தை ஒடிப் பார்த்து விட்டார்கள் என்றாலும், ஏறத்தாழ 15 ஆண்டு களுக்கு முன்னர்தான், பெண்கள் மாரதான் பற்றி பத்திரிகைகளில் செய்திகள் வெளிவந்தன. ஆரம்ப நாட்களில், இப்போட்டியில் கலந்து கொண்ட அநேக வீராங்கனைகள், ஓடும் மொத்த துரத்தை முடிக்க இயலாமல் விலகிக் கொண்டனர். முயற்சித்தவர் பலர். முடித்தவர் சிலர். ஆரம்பத்தில் 5 மணி நேரத்திற்கு மேல் ஓடி முடிப்பதற்காக எடுத்துக் கொண்டநேரம், ஏழு ஆண்டு காலத்திற்கு அப்படியேதான் தொடர்ந்து வந்தது. கடந்த எட்டு ஆண்டுகளாகத்தான், 3 மணி நேரத்திற்குள்ளாக ஒடிமுடிக்கும் வல்லமையை வீராங்கனைகள் பெற்று வந்திருக்கின்றனர்.