பக்கம்:பெண்கள் விளையாடினால் என்ன ஆகும்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

87

திறமையைக் குறைத்து விடுகிறது. குழந்தை பிறப்பிற்குப் பிறகு, பெண்கள் போட்டிகளில் பங்கு பெறுவது தான் அறிவுடைய செயலாகும்.

குழந்தை பெற்றதற்குப் பின், பெண்களின் திறமையில் வியக்கத்தகு மாற்றங்கள் ஏற்பட்டு, அவர்கள் முன்பு, பெற்றிருந்த திறமையை விட அதிகமாகி புகழ் பெற்றிருக்கின்றனர் என்பதற்கு எத்தனையோ வரலாற்றுச் சான்றுகள் இருக்கின்றன.

ஒலிம்பிக் பந்தயத்தில் நான்கு தங்கப் பதக்கங்களை வென்று சாதனைபுரிந்த நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த திருமதி. பிளாங்கர்ஸ் கோயன், இரண்டு குழந்தைகளுக்குத் தாயாக இருந்த போது பெற்ற புகழாகும். இந்தியாவைச் சேர்ந்த ஜலஜ நாதன் இஸ்ரேலைச் சேர்ந்த எஸ்தர் ராட் போன்ற பலர். இக்கருத்துக்கு இனிய சான்றுகளாகத் திகழ்கின்றார்கள்.

பெண்களுக்கு அகலமான இடுப்புப் பகுதி (Pelvis) உண்டு. ஆனால் விளையாட்டில் ஈடுபட்டிருக்கின்றவர்களுக்கு கொஞ்சம் அகலம், குறைந்ததாக இருக்கும். இது விளையாட்டுக்கு உதவும். ஆனால் குழந்தைப் பேற்றுக்கு கஷ்டத்தைக் கொடுக்கும். என்றாலும், குழந்தைபெறும் நேரத்தையும் குறைத்து வலியையும் குறைத்து உதவக் கூடும் இந்த விளையாட்டுப் பயிற்சி என்கிறார்கள். ஆகவே, இதுவும் பெண்கள் விளையாட்டில்