பக்கம்:பெண்கள் விளையாடினால் என்ன ஆகும்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

88

ஈடுபட, உதவுவனவாகவே இருக்கிறது என்ற உண்மையை நாம் புரிந்து கொள்ளலாம்.

பெண்கன் அழகும் நளினமும்

பெண்களின் பொலிவும் தெளிவும், அழகும் நளினமும் விளையாட்டில் ஈடுபட்டால் வீணாகிப் போய்விடும். பாழடைந்து போகும் என்று பதை பதைப்பவர்கள் உண்டு. அதுதான் இல்லை.

அவர்கள் செய்யும் அற்புதமான உடற்பயிற்சி அவர்களை அழகு மிகுந்தவர்களாகவே ஆக்கிவிடுகிறது. வேண்டாத சதைகளை விரட்டியடிக்கிறது. நரம்பிலே வலுவேற்றுகிறது. எலும்பிலே திறன் ஏற்றுகிறது. சீராக செயல்படத் துாண்டுகிறது.

விளையாட்டில் ஈடுபடுவதால், பெண்களை எப்பொழுதும் இளமையாகவே இருத்தி வைக்கிறது. அவர்கள் தோற்றத்திலும் நடைமுறைகளிலும் நளினம் நிறைந்தவர்களாக ஆகின்றார்கள். உடலால் மட்டுமல்ல, சிந்தனையிலும் செயலிலும் கூட அவர்கள் என்றும் இளமையாகவே விளங்குகின்றார்கள். இன்பமாக வாழ்கின்றார்கள்.

வாழ்வு தரும் விளையாட்டு

உடல் உறுப்புக்கள் நன்கு உழைக்க வேண்டும். அப்பொழுது தான் அவை உறுதி