பக்கம்:பெண்ணில்லாத ஊரிலே.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"பெண்ணில்லாத ஊரிலே' என்ற புதுமையான தலைப் போடு, சிறுகதை மன்னன், அன்புச் சகோதரர் திரு. தென்னரசு அவர்களின் 1964-லிருந்து 1989-வரை தேதிவாரியாக, நடை புெற்ற நிகழ்ச்சிகளின் தொகுப்புதான் இந்நூல். . . . . . . . .

எளிய, இனிமையான, சுவையான அவருக்கே உரிய பாணியில், நடையில் எழுதியிருக்கிருர். -

நூலின் ஆரம்பமே என்னைப்பற்றிச் சுற்றி அரசியல் சட்டத்தின் மொழிப்பிரிவை முதல் முறையாக் அண்ணு அவர்கள் நெருப்பினுக்கு இறையாக்குவதென்ற முடிவில், பகிரங்கமாக, ஒளிமறைவின்றி நாட்டுக்குத் தெரிவித்துவிட்டு, காஞ்சிபுரத்திலிருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்த நேரத்தில் கைது செய்யப்பட்டார் அண்ணுவழி என்வழி என்ற முடிவில் தென்னரசு அவர்கள் எரிப்புப் போராட்டத்திற்குத் தயாராளுர், தீபரவிற்று. சட்டத்தின் மொழிப்பிரிவு சாம்ப லாயிற்று. கைது செய்யப்பட்டார். நோக்கம், அரசியல் சட்டத்தை அவமானப்படுத்த அல்ல, நமது உண் ர் ைவ உலகறியச் செய்ய! - . .

நான் ஏற்கனவே, நாகர்கோயிலில் தபால் நிலையத்திற்கு முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட்ேன். ஆறுவாரத் தண்டனை பெற்று மதுரை சிறைச் சாலைக்குக் கொண்டுவரப் பட்டேன். அதே சிறையில் ஒரு வருடம் தண்டனை பெற்ற தடந்தோள் வீரன் தென்னரசு அவர்கள் ராஜமரியாதையுடன் அரியனையில் அமர்த்தப்பட்டிருந்தார். . . .

தென் கிழக்காசிய நாடுகளான, தென்வியட்நாம்,

ஹாங்காங், ஜப்பான், அத்தோடு ப்ார்மோசா போன்ற நாடுகளுக்குச் சென்று விட்டுத் திரும்பிய என்னை, அரசாங்க விருந்தினகை மதுரைச் சிறை ஏற்றுக் கொண்டது!

நான் கொலு வீற்றிருந்த அடுத்த அறையில் சிம்மா. சனத்தில் அமர்ந்திருந்தவர் சகோதரர் தென்னரசு. *

மாலை ஆறு மணிக்கு, சிறைத்தாய் தாலாட்டுப்பாடும் முயற்சி மேற்கொள்வாள்.