பக்கம்:பெண்ணில்லாத ஊரிலே.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காலே, கதவுகள் திறந்து கொள்ளும், கூடவே எங்களது மனக் கதவுகளும்.

தென்னரசு என் சிறைக்கு வருவார். மணிக்கணக்காக, மகிழ்ச்சியோடு உரையாடுவோம். தனது இந்த நூலில் சியாங் காய் ஷேக், அவர் துணைவியார் அவர்களோடு உரையாடி யவைகளைப்பற்றிச் சொன்னர். ஆர்வத்தோடு கேட்டார்! பேச்சுக்கள் குறிப்பெடுக்கப்படவில்லை. ஆனால் அவரது மனக் குறிப்பேட்டில் அழியாத இடத்தைப் பெற்றன என்பதை இந்நூல் மூலம் தெரிந்து கொண்டேன். -

இந்நூல், இலக்கியம் மட்டுமல்ல, சுருக்கமான வரலாறு அன்பு நண்பர் தென்னரசிற்கு நினைவாற்றல் அதிகம் என்பதை சுட்டிக் காட்டத்தவறவில்லை கால் நூற்ருண்டு காலவரலாறு இது. இந்த நூலில் அவர் எனக்கு பூச்செண்டு வழங்கியிருக்கிருர் புகழ்மாலை சூடியிருக்கிருர்,

தகுதி படைத்தவன நான்? பழமொழி ஒன்று நினைவிற்கு வருகிறது, காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு!”

"மிருதுவான வார்த்தைகளைப் பயன் படுத்து ஆல்ை வாதங்கள் கடுமையாக இருக்கட்டும்' என்பதற்குச் சிறுகதை மன்னன் சிறந்த எடுத்துக்காட்டு. இது அண்ணுவின் பாதை.

அறிஞர் அண்ணுவைப்பற்றி அவர் கீழ்வருமாறு குறிப் பிட்டு, தனது இயல்புகளை வெளிப்படுத்துகிருர்’’.

'கண்ணியமான பொது வாழ்க்கையையும், தூய்மை யானதியாகத்தையும் மேற்கொள்ளுவோரை அண்ணு மதிக்கத் தவறமாட்டார். எனக்கு இதில் அசைக்க முடியாத நம்பிக்கையுண்டு. எந்தக்காரியத்தையும் நான் அவருடைய யோ ச னை கேட்டுத்தான் செய்வேன். சொந்த விஷயங்களில் கூட அந்த நிலைதான். நான் நினைத்தபடி, எதிர்பார்த்தபடி-கனவு கண்டபடி அவர் என்மனதில் பூரணமாக நிறைந்து விட்டார். என் பெயர் சொல்லி அவர் அடிக்கடி கூப்பிடுவார். சொர்க்கம் போவதற்கு ஊசி முனையில் தவமிருந்து வெற்றிபெற்ற வனப்போல் என்மனம் குளிர்ந்தது”. (பக்கம் 27)

இந்த உணர்வு கலந்த வரிகளைப் படித்த என் மனமும் குளிர்ந்தது. _x .

இந்த நூலில், தென்னரசு அவர்களின் பெருந்தன்மை பளிச் சிடுவதைப் பார்க்கிறேன். ஊரறிந்த உண்மையை உளத் தூய்மையோடு மன்றப்பவர்கள் உண்டு ஆல்ை வரலாற்றை

9