பக்கம்:பெண்ணில்லாத ஊரிலே.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்திரா கர்ந்தி அதிகாரிகளையே நம்பி இருந்ததால், மக்க ளிடத்தில் தனக்குள்ள செல்வாக்கு என்ன என்பதை அறிந்து கொள்ளவில்லை. எமெர்ஜென்சியால் தனக்கு மதிப்பு உயர்ந்து இருப்பதாக இந்திரா காந்தி நின்ைத்தார். அது உண்மை அல்ல என்பது பின்னல் நிருபணம் ஆயிற்று. அன்பு வேறு, பயம்வேறு என்பதை இந்திரா காந்தி உணரவில்லை. பண்டிதநேரு அன்பி ஞல் அடக்கி ஆண்டார். இந்திரா காந்தி பயமுறுத்தி அடக்கி ஆள நினைத்தார். ஆனல் அவர் போட்ட தவருன கணக்கு தவருன விடையைத்தந்தது. - இந்தக் காலக்கட்டத்தில் சகோதரர் முரசொலி மாறன் வெளியில் இல்லாதது பெரிய குறையாக எனக்குப்பட்டது. ஆம் மாறனும் மிசாக்கைதியாக சென்னைச் சிறைச்சாலையில் இருந். தார். உடல் நலிவுற்றும் கலங்காத வீரகை அவர் சிறை வாசத்தைக் கழித்தார். நடக்க முடியர்த நிலை வந்த போதும் குறிச்சியில் உட்கார வைத்துத்தான் அவரை நேர்காணலுக்கு துக்கி வந்திருக்கிருர்கள். (அதன் சாகுபடியை இந்திரா காந்தி, பிற்காலத்தில் தன் குடும்பத்திலேயே அ று வ ைட செய்து கொண்டார்.) அதைப்போலவேதான் தம்பி ஸ்டாலினும் துன் புறுத்தப்பட்டார்; அடித்துத் துவைக்கப்பட்டார். s சஞ்சய் காந்தியின் உடலை ப் பார்த் து இந்திரா காந்தி, கண்ணிர் வடித்தார்.-மு. க. ஸ்டாலின் மிசாவில் சிறைச் சாலையில் இருந்தபோது சித்திரவதைக்கு ஆளானர். அதன. அறிந்த இந்திரா குடும்பம் குதூகலித்தது; அதற்குத் தண்டனை. யாகத்தான்-இயற்கை சஞ்சய் காந்தி ஒட்டிவந்த விமானத்தை சுக்குநூருகச் சிதறடித்து சஞ்சயின் உடலைச் சின்னபின்னப் படுத்தி இந்திராகாந்தியை கண்ணிர் விடச்செய்தது போலும்.

ஒரு நாள் இரவு 7 மணியளவில் எங்க்ள் பிளாக்கில் குது குலம் கூத்தாடியது. பின்னல் விசாரிக்கும்போது பார்லிமெண்ட் கலைக்கப்பட்டு விட்டது என்றும், விரைவில் பொதுத் தேர்தல் வரப்போகிறது என்றும், ரேடியோவில் அறிவித்ததாகச் சொன் ர்ைகள். அன்று இரவே விடுதலை வந்துவிடும் என்று நாங்கள் எல்லாம் மூட்டை முடிச்சுகளைக் கட்டிைேம். எதிர்பார்த்தபடி அன்று இரவு வரவில்லை. ஒரு வாரம் கழித்துத்தான் விடுதலை ஆரம்பமானது. அனைவரையும் ஒட்டுமொத்தமாக விடுதலை செய்யாமல் ஒரு நாளைக்கு ஒரு சிறைக்கு பத்துப்பேர் வீதம்

விடுதலை செய்து கொண்டு வந்தார்கள்.

1977 ஜனவரி 31ம்தேதி எனக்கு விடுதலை வந்தது. சரியாக 365 நாளில் விடுதலை ஆனேன். இரவு பன்னிரெண்டு மணிக்கு பெட்டி படுக்கையுடன் நான் வெளியே வந்தேன். வேலூர் கழகப்

89.