பக்கம்:பெண்ணில்லாத ஊரிலே.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிரமுகர் தேவராஜாக்கு தகவல் தெரிந்து அவர் சிறைவாசலில் வந்து காத்திருந்தார். அன்று இரவு அவருடைய வீட்டில் தங்கி இருந்துவிட்டு காலையில் 6 மணியளவில் மதுரைக்குப் பஸ்ஸில். வந்தேன். என்னை பஸ் நிலையத்தில் என் தம்பிகள் அருணச்சலம் திருஞானம் இருவரும் வரவேற்ருர்கள். மூன்று மாதம் வேலூர் வாசத்திற்குப் பின்னர் பிப்ரவரி முதல் தேதிக்குப் பிறகுதான் குழந்தைகளையும் மற்றவர்களையும் பார்த்தேன். நான் விடுதலை ஆகியிருந்தாலும் எமெர்ஜென்சி அப்படியே இருந்தது. போலீஸ் C.I.D.க்கள் எனது நடவடிக்கைகளை கண்காணித்தார்கள். மறு படியும் உங்களைப் பிடிக்க நேரலாம் என்று பயமுறுத்தினர்கள். நான் மட்டுமல்ல மிசாக் கைதிகள் யாரும் அதைப் பொருட் படுத்தவில்லை. தி. மு. கழகத்தை கலைஞரின் பேச்சும் எழுத்தும், பாதுகாக்கும் என்ற அசாத்தியமான ைத ரிய ம் தொண்டர் களுக்கு ஏற்பட்டிருந்தது.

தேர்தல் வந்தது. தமிழ்நாட்டில் தி. மு. க., அ. தி.மு.க , காங்கிரஸ், ஆகிய மூன்று கட்சியினரும் த னி த் த னி ய க ப் போட்டியிட்டனர். அ.தி மு க. வெற்றி அடைந்தது. தி.மு க. பிரதான் எதிர்க்கட்சியானது. தலைவர் கலைஞர் எதிர்க்கட்சித் தலைவரானர். ஆனல் வட இந்தியாவில் காங்கிரசின் அஸ்தி வாரம் தகர்ந்துவிட்டது. மறுபடியும் மி சா வி. ற் கு ப் போக வேண்டியது வரும் என்ற எண்ண்ம் எங்களுக்குத் துளியும் ஏற். படாத வகையில் இந்திரா காந்தியே தோற்றுப்போர்ை. அது வரை எமெர்ஜென்சியை வைத்திருந்த இந்திராகாந்தி-தான் தோல்வி அடைந்ததும் அன்று இரவு ஒரு மணிக்கு எமெர் ஜென்சியை வாபஸ் பெற்றர். மறு நாள் நல்ல பொழுதாக விடிந்தது.

இந்தத் தொகுப்பில் சில முக்கியமான தகவல்களையும் எனக்கும் தலைவருக்கும் இடையில் நடந்து வந்த கடிதப் பரிமாற்றங்களையும் நான் குறிப்பிடவில்லை. குறிப்பிட்டாலும் அது மற்றவர்களுக்குப் பயன்படாது என்பதால் நான் அவை களைத் தவிர்த்து விட்டேன்.